• Jun 29 2024

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை samugammedia

Chithra / Oct 26th 2023, 8:42 am
image

Advertisement

 

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.

மூளை வடிகால் பற்றிய அழுத்தமான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சகம் பாராமுகம் காட்டுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, முக்கியஸ்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் நோயாளர் காவு வாகனச் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

மேலும்,மறு அறிவிப்பு வரும்வரை வைத்தியசாலை கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் உட்பட அதனுடன் தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் நவம்பர் 1ஆம் திகதிக்கு பின்னர் மாகாண அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கப் போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.


தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம். விடுக்கப்பட்ட எச்சரிக்கை samugammedia  வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.மூளை வடிகால் பற்றிய அழுத்தமான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சகம் பாராமுகம் காட்டுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இந்த நிலையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, முக்கியஸ்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் நோயாளர் காவு வாகனச் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.மேலும்,மறு அறிவிப்பு வரும்வரை வைத்தியசாலை கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் உட்பட அதனுடன் தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.அத்துடன் நவம்பர் 1ஆம் திகதிக்கு பின்னர் மாகாண அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கப் போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement