• Sep 08 2024

தங்கத்துரை எம்.பி யின் 26வது நினைவு தினம்! samugammedia

Tamil nila / Jul 4th 2023, 7:59 pm
image

Advertisement

தமிழ் பேசும் மக்களுக்கான சிறந்த அரசியல் தலைவரான விளங்கியவர் அமரர். அருணாசலம் தங்கத்துரை என முன்னாள் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார். அமரர். அ.தங்கத்துரை அவர்களின் 26வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிக்கையில், 

திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து 1997ம் ஆண்டு யூலை மாதம் 05ம் திகதி அகாலமடைந்திருந்த கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுதினம் (05.07.2023) ஆகும். இனம், மதம் மொழிகளுக்கு அப்பால் பிரிவினை பாராது சேவை செய்த சிறந்த அரசியல் சேவகன் அமரர். தங்கத்துரை அவர்கள் தனது சேவையால் தமிழ் மக்களில் மாத்திரமல்ல முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் மனங்களிலும் நீங்கா இடத்தை பிடித்திருந்தார். 

அத்துடன் அன்றைய ஜனாதிபதி கௌரவ சந்திரிக்கா அம்மையாரிடமும் எனைய பல அரசியல் தலைவர்களிடமும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததோடு அதன் மூலமாக திருகோணமலைவாழ் மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் பல இளைஞர்களுக்கான வேலையாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்திருந்தார். இதனால் இன்றும் அந்த மக்கள் தங்கத்துரை அண்ணன் எனவும் தங்கத்துரை ஐயா எனவும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றார்கள். 

இவருடைய சேவையினை கௌரவிக்கும் முகமாக அவரது 25வது நினைவு தினத்தையொட்டி கடந்த வருடம் கிளிவெட்டியில் மக்களால் நினைவுச் சிலை நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


தங்கத்துரை எம்.பி யின் 26வது நினைவு தினம் samugammedia தமிழ் பேசும் மக்களுக்கான சிறந்த அரசியல் தலைவரான விளங்கியவர் அமரர். அருணாசலம் தங்கத்துரை என முன்னாள் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார். அமரர். அ.தங்கத்துரை அவர்களின் 26வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிக்கையில், திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து 1997ம் ஆண்டு யூலை மாதம் 05ம் திகதி அகாலமடைந்திருந்த கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுதினம் (05.07.2023) ஆகும். இனம், மதம் மொழிகளுக்கு அப்பால் பிரிவினை பாராது சேவை செய்த சிறந்த அரசியல் சேவகன் அமரர். தங்கத்துரை அவர்கள் தனது சேவையால் தமிழ் மக்களில் மாத்திரமல்ல முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் மனங்களிலும் நீங்கா இடத்தை பிடித்திருந்தார். அத்துடன் அன்றைய ஜனாதிபதி கௌரவ சந்திரிக்கா அம்மையாரிடமும் எனைய பல அரசியல் தலைவர்களிடமும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததோடு அதன் மூலமாக திருகோணமலைவாழ் மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் பல இளைஞர்களுக்கான வேலையாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்திருந்தார். இதனால் இன்றும் அந்த மக்கள் தங்கத்துரை அண்ணன் எனவும் தங்கத்துரை ஐயா எனவும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இவருடைய சேவையினை கௌரவிக்கும் முகமாக அவரது 25வது நினைவு தினத்தையொட்டி கடந்த வருடம் கிளிவெட்டியில் மக்களால் நினைவுச் சிலை நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement