• Sep 21 2024

யாழ்.பொலிசாரின் அராஜகம்; மலையகத்திலிருந்து யாழ் வந்த இளைஞர்களை மோசமான வார்த்தைகளினால் திட்டியதாகக் குற்றச்சாட்டு! samugammedia

Tamil nila / Jun 14th 2023, 11:15 pm
image

Advertisement

மலையக மண்ணில் இருந்து கின்னஸ் சாதனைக்காக யாழ்ப்பாணம் வந்த இளைஞர்களை  மோசமான வார்த்தைகளினால் பேசி  சட்டையை பிடித்து  துரத்தியதாக  இளைஞர்கள் சிலர், பொலிசார் மீது குற்றம் சட்டியுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பான காணொளி ஒன்றையும் முகநூலில் வெளியிட்டுள்ளனர். 


பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள், யாழ்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். 

இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இந்த சாதனை பயணம் 16ம் திகதி வரை தொடரவுள்ளது.


இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவருக்கும் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்கான அனுமதி கடிதம் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்தனர். இதற்கு ஒத்துழைப்பு தருவதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இணங்கியிருந்தார். 



இதனடிப்படையில் இன்று மதியம் 2 மணி அளவில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த   விக்கேஷ், தயாபரன் உட்பட்ட  குழுவினரை பொலிஸ் அதிகாரிகள்  இருவர் நடத்திய முறை மிகவும் மோசமாக இருந்ததாக இளைஞர்கள் காணொளி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

 

அத்துடன் தகாத வார்த்தை பிரயோகத்தினால் பேசியதுடன் மதுபோதையில் அட்டகாசம் புரிந்ததால்  அப்பகுதியில் குழப்பம்  ஏற்பட்டிருந்தது.

யாழ்.பொலிசாரின் அராஜகம்; மலையகத்திலிருந்து யாழ் வந்த இளைஞர்களை மோசமான வார்த்தைகளினால் திட்டியதாகக் குற்றச்சாட்டு samugammedia மலையக மண்ணில் இருந்து கின்னஸ் சாதனைக்காக யாழ்ப்பாணம் வந்த இளைஞர்களை  மோசமான வார்த்தைகளினால் பேசி  சட்டையை பிடித்து  துரத்தியதாக  இளைஞர்கள் சிலர், பொலிசார் மீது குற்றம் சட்டியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பான காணொளி ஒன்றையும் முகநூலில் வெளியிட்டுள்ளனர். பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள், யாழ்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இந்த சாதனை பயணம் 16ம் திகதி வரை தொடரவுள்ளது.இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவருக்கும் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்கான அனுமதி கடிதம் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது.இந்நிலையில், சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்தனர். இதற்கு ஒத்துழைப்பு தருவதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இணங்கியிருந்தார். இதனடிப்படையில் இன்று மதியம் 2 மணி அளவில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த   விக்கேஷ், தயாபரன் உட்பட்ட  குழுவினரை பொலிஸ் அதிகாரிகள்  இருவர் நடத்திய முறை மிகவும் மோசமாக இருந்ததாக இளைஞர்கள் காணொளி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தை பிரயோகத்தினால் பேசியதுடன் மதுபோதையில் அட்டகாசம் புரிந்ததால்  அப்பகுதியில் குழப்பம்  ஏற்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement