• May 18 2024

தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க அமைச்சரவைக்கு எந்த அதிகாரமும் இல்லை- அனுர சுட்டிக்காட்டு!

Sharmi / Jan 11th 2023, 2:09 pm
image

Advertisement

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் செலுத்தப்படுவதை தடுப்பதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அடிப்படையாக வைத்து அனைத்து அரச அதிபர்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக அரசாங்கம் மிகவும் வெட்கப்பட வேண்டுமெனவும் இவ்வாறான கீழ்த்தரமான செயற்படுகளில் அரசாங்கம் ஈடுபட்டுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதை தவிர்க்குமாறு கட்டளை இடுவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பிரைச்சனைகள் இருக்குமாயின் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானத்தை மேற்கொள் காட்டி பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன கட்டுப்பணம் செலுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து அரச அதிபர்களுக்கும் அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க அமைச்சரவைக்கு எந்த அதிகாரமும் இல்லை- அனுர சுட்டிக்காட்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் செலுத்தப்படுவதை தடுப்பதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்றையதினம் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அடிப்படையாக வைத்து அனைத்து அரச அதிபர்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக அரசாங்கம் மிகவும் வெட்கப்பட வேண்டுமெனவும் இவ்வாறான கீழ்த்தரமான செயற்படுகளில் அரசாங்கம் ஈடுபட்டுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதை தவிர்க்குமாறு கட்டளை இடுவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பிரைச்சனைகள் இருக்குமாயின் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.அமைச்சரவையின் தீர்மானத்தை மேற்கொள் காட்டி பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன கட்டுப்பணம் செலுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து அரச அதிபர்களுக்கும் அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement