• Nov 24 2024

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கும் அனுரவுக்கும் இடையில் தான் போட்டி- ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Sep 7th 2024, 9:07 pm
image

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளில் ரணில் விக்ரமசிங்க தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து தோப்பூர் -செல்வநகர் காரியாலத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு இன்று(07)  மாலை திறந்து வைத்தார்.

இதன்பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை எமது கட்சி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் உள்ளிட்டோர் இணைந்து சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்பதற்காக செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். அதில் நீங்களும் பங்காளிகளாக மாற வேண்டும்.  

இந்த தேர்தல் நான்கு பேருக்கு இடையில் இடம்பெறுகின்ற போட்டியாக இருக்கின்ற தேர்தலாகும்.

இதில் யார் வெற்றி பெறுவார் என்பதை நீங்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றீர்கள்.  

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளில் ஒரு கட்டத்தில் ரணில் விக்ரமசிங்க காணப்பட்டார்.

அவர் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டார். சஜித் பிரேமதாசவா அனுரகுமார திசாநாயக்கவா? என்பதுதான் தற்போது போட்டியாகும்.

சஜித் பிரேமதாச வெற்றி பெறுகின்ற போது மாத்திரம்தான் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து  மக்களுக்குமான விடிவாக அமையும் என தெரிவித்ததோடு இந்த நாட்டினுடைய பாதுகாப்பு, பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் எமது மக்களை பிரிப்பதற்காக , பிளவுபடுத்துவதற்காக  ஒரு சிலர் முன் வந்திருக்கிறார்கள். 

அவர்கள்தான் கோட்டபாயாவை பலப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள்.கடந்த காலங்களில் அநியாயங்களை செய்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

இவர்களுக்கு சரியான பாடத்தை போற்றுவதற்காக அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.   



ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கும் அனுரவுக்கும் இடையில் தான் போட்டி- ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டு. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளில் ரணில் விக்ரமசிங்க தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து தோப்பூர் -செல்வநகர் காரியாலத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு இன்று(07)  மாலை திறந்து வைத்தார்.இதன்பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இம்முறை எமது கட்சி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் உள்ளிட்டோர் இணைந்து சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்பதற்காக செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். அதில் நீங்களும் பங்காளிகளாக மாற வேண்டும்.  இந்த தேர்தல் நான்கு பேருக்கு இடையில் இடம்பெறுகின்ற போட்டியாக இருக்கின்ற தேர்தலாகும்.இதில் யார் வெற்றி பெறுவார் என்பதை நீங்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றீர்கள்.  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளில் ஒரு கட்டத்தில் ரணில் விக்ரமசிங்க காணப்பட்டார்.அவர் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டார். சஜித் பிரேமதாசவா அனுரகுமார திசாநாயக்கவா என்பதுதான் தற்போது போட்டியாகும்.சஜித் பிரேமதாச வெற்றி பெறுகின்ற போது மாத்திரம்தான் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து  மக்களுக்குமான விடிவாக அமையும் என தெரிவித்ததோடு இந்த நாட்டினுடைய பாதுகாப்பு, பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தார்.இந்த தேர்தலில் எமது மக்களை பிரிப்பதற்காக , பிளவுபடுத்துவதற்காக  ஒரு சிலர் முன் வந்திருக்கிறார்கள். அவர்கள்தான் கோட்டபாயாவை பலப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள்.கடந்த காலங்களில் அநியாயங்களை செய்தவர்கள் எனவும் தெரிவித்தார்.இவர்களுக்கு சரியான பாடத்தை போற்றுவதற்காக அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.   

Advertisement

Advertisement

Advertisement