• May 18 2024

கனடாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை! samugammedia

Tamil nila / May 15th 2023, 10:11 am
image

Advertisement

கனடாவில் காட்டுத் தீச்சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளமையினால் அவற்றைச் சமாளிக்க அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.

மேற்குப் பகுதியில் வெப்பமான, வறண்ட வானிலை அடுத்த வாரமும் தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேற்கில் உள்ள அல்பேர்ட்டா (Alberta) மாநிலத்தில் ஒரே வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீச்சம்பவங்கள் நேர்ந்துள்ளன.

அந்த வட்டாரத்தில் சிறப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் இந்தக் காலத்தில் பொதுவாக நிலவும் தட்ப, வெப்பநிலையைவிட அது 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் அதிகம். நிலைமை எந்நேரமும் மாறலாம்.

அதனால் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.

அந்த வட்டாரத்தைச் சூழ்ந்திருக்கும் கடும் வெப்பத்தால் எரிசக்தி உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கனடாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை samugammedia கனடாவில் காட்டுத் தீச்சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளமையினால் அவற்றைச் சமாளிக்க அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.மேற்குப் பகுதியில் வெப்பமான, வறண்ட வானிலை அடுத்த வாரமும் தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேற்கில் உள்ள அல்பேர்ட்டா (Alberta) மாநிலத்தில் ஒரே வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீச்சம்பவங்கள் நேர்ந்துள்ளன.அந்த வட்டாரத்தில் சிறப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வருடத்தின் இந்தக் காலத்தில் பொதுவாக நிலவும் தட்ப, வெப்பநிலையைவிட அது 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் அதிகம். நிலைமை எந்நேரமும் மாறலாம்.அதனால் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.அந்த வட்டாரத்தைச் சூழ்ந்திருக்கும் கடும் வெப்பத்தால் எரிசக்தி உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement