இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் வைத்தியசாலையில் சிலர் -இளைஞன் உயிரிழப்பு..!

429

திருகோணமலை-சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07) அதிகாலை 1.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-காக்காமுனை பகுதியைச் சேர்ந்த எம்.முஜாஹித் (20வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிண்ணியா ரஹ்மானியா வீதியைச் சேர்ந்த 18 வயது 20 வயது 29 வயது மற்றும் 60 வயது உடையவர்கள் காயமடைந்துள்ளதாகவும், இதில் இராணுவ சிப்பாய் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அனுமதிக்கப்பட்ட நான்கு பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் கிண்ணியா-நடுவூற்று பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: