கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன.
லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.
கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் ஒளிபரப்பட்டது.
டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று போட்டியை கண்டு இரசித்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தூதரகத்தில் FIFA கால்பந்து இறுதிப் போட்டியை பார்த்து மகிழ்ந்த முக்கியஸ்தர் கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் ஒளிபரப்பட்டது.டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மீனாட்சி லேகி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று போட்டியை கண்டு இரசித்தமை குறிப்பிடத்தக்கது.