தென்னிலங்கையில் அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது.
முதலாவது மக்கள் கூட்டத்தின் போது மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரத்தின் நிலைப்பாடும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழில் அதிபர் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை சிங்கள தேசிய வாத அமைப்புகளும் இணைந்துள்ளன.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்கமவில் இருந்த உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம். ஆட்டத்தை ஆரம்பித்த விமல் அணி. தென்னிலங்கையில் அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது.முதலாவது மக்கள் கூட்டத்தின் போது மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரத்தின் நிலைப்பாடும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழில் அதிபர் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். அதேவேளை சிங்கள தேசிய வாத அமைப்புகளும் இணைந்துள்ளன.அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்கமவில் இருந்த உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.