• Nov 23 2024

இலங்கையில் மிருகத்தனமான சமுகத்தை உருவாக்கியுள்ள நிறைவேற்று அதிகாரம்! விஜயதாச குற்றச்சாட்டு

Chithra / Sep 6th 2024, 9:06 am
image

 

இலங்கையில்  நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மக்களின் வாழ்க்கையை ஒரு கடினமான இடத்திற்கு தள்ளியுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் பொறிமுறையினாலும் ஊழல் அரசியலினாலும் நாடு பாதாளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் இந்த நாடு ஆழமான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு 07 இல் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று  நடைபெற்ற ஒரு முறையான நாடு என்ற ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களாலும், கட்சிகளாலும் வங்குரோத்தாக்கப்பட்ட நாட்டில் முதன்முறையாக தேர்தல் நடைபெறுகின்றது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் சுதந்திர பொருளாதார வர்த்தக கொள்கையும் இந்த நாட்டில் மிருகத்தனமான சமூகத்தை உருவாக்கியது.

எனவே, இந்த சமுதாயத்தை மாற்ற இன்றைய மக்கள் முன் நிற்க வேண்டும். சிறிது காலம், இந்த நாடு நடுத்தர வர்க்க நாடாக இருந்தது. 

அதன் பிறகு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது இடத்தை இழந்தது, கட்சியை கைப்பற்றியவர்கள் கட்சியை பலப்படுத்தவில்லை. 

ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது. இன்றும் அந்த கட்சிக்கு இந்த நாட்டில் ஐம்பது அறுபது இலட்சம் வாக்குகள் உள்ளன. 

இந்த நாட்டை மாற்ற அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும். இந்த நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால் எதிர்காலம் இல்லை என தெரிவித்தார்.

இலங்கையில் மிருகத்தனமான சமுகத்தை உருவாக்கியுள்ள நிறைவேற்று அதிகாரம் விஜயதாச குற்றச்சாட்டு  இலங்கையில்  நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மக்களின் வாழ்க்கையை ஒரு கடினமான இடத்திற்கு தள்ளியுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அரசியல் பொறிமுறையினாலும் ஊழல் அரசியலினாலும் நாடு பாதாளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் இந்த நாடு ஆழமான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.கொழும்பு 07 இல் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று  நடைபெற்ற ஒரு முறையான நாடு என்ற ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களாலும், கட்சிகளாலும் வங்குரோத்தாக்கப்பட்ட நாட்டில் முதன்முறையாக தேர்தல் நடைபெறுகின்றது.நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் சுதந்திர பொருளாதார வர்த்தக கொள்கையும் இந்த நாட்டில் மிருகத்தனமான சமூகத்தை உருவாக்கியது.எனவே, இந்த சமுதாயத்தை மாற்ற இன்றைய மக்கள் முன் நிற்க வேண்டும். சிறிது காலம், இந்த நாடு நடுத்தர வர்க்க நாடாக இருந்தது. அதன் பிறகு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது இடத்தை இழந்தது, கட்சியை கைப்பற்றியவர்கள் கட்சியை பலப்படுத்தவில்லை. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது. இன்றும் அந்த கட்சிக்கு இந்த நாட்டில் ஐம்பது அறுபது இலட்சம் வாக்குகள் உள்ளன. இந்த நாட்டை மாற்ற அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும். இந்த நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால் எதிர்காலம் இல்லை என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement