• Sep 08 2024

வெளிநாட்டிலிருந்து வரும் மகளை அழைத்துவரச் சென்ற தந்தை...! விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Sep 19th 2023, 1:15 pm
image

Advertisement

மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் நேற்று(18) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் தமது மகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தமது பேத்தியுடன் கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுமியும் 52 வயதுடைய சிறுமியின் முத்தப்பாவான முகம்மது ஹீசைன் ஸ்த்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரே வாகனத்தைச் செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 49 வயதுடைய சிறுமியின் மூத்தம்மா காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பிரதேச மக்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக  மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


வெளிநாட்டிலிருந்து வரும் மகளை அழைத்துவரச் சென்ற தந்தை. விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் நேற்று(18) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் தமது மகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தமது பேத்தியுடன் கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுமியும் 52 வயதுடைய சிறுமியின் முத்தப்பாவான முகம்மது ஹீசைன் ஸ்த்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவரே வாகனத்தைச் செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 49 வயதுடைய சிறுமியின் மூத்தம்மா காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பிரதேச மக்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக  மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement