• May 10 2025

இறக்காமம் வரலாற்றில் முதலாவது சுயேட்சைக்குழு பிரதேச சபை உறுப்பினர் தெரிவு..!

Sharmi / May 9th 2025, 10:11 am
image

இறக்காமம் பிரதேச சபைக்கு சுயேட்சைக்குழு கால்பந்து சின்னம் சார்பில் போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 06.05.2025 அன்று நடைபெற்று முடிந்த 2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவிற்கமைய இறக்காமம் பிரதேச சபை 6,7 ஆம் வட்டாரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) தலைமையிலான சுயேட்சை அணி 443 வாக்குகளை பெற்றுள்ளது.

ஒரு உறுப்பினரை மேற்குறித்த சுயேட்சைக்குழு பெற்றுக்கொண்டுள்ளது.

பிரதேச சபை வரலாற்றில் முதன் முதலாக சபைக்கு சுயேட்சைக்குழு சார்பில் கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.



இறக்காமம் வரலாற்றில் முதலாவது சுயேட்சைக்குழு பிரதேச சபை உறுப்பினர் தெரிவு. இறக்காமம் பிரதேச சபைக்கு சுயேட்சைக்குழு கால்பந்து சின்னம் சார்பில் போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 06.05.2025 அன்று நடைபெற்று முடிந்த 2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவிற்கமைய இறக்காமம் பிரதேச சபை 6,7 ஆம் வட்டாரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட கே.எல்.சமீம்(எல்.எல்.பி) தலைமையிலான சுயேட்சை அணி 443 வாக்குகளை பெற்றுள்ளது.ஒரு உறுப்பினரை மேற்குறித்த சுயேட்சைக்குழு பெற்றுக்கொண்டுள்ளது. பிரதேச சபை வரலாற்றில் முதன் முதலாக சபைக்கு சுயேட்சைக்குழு சார்பில் கே.எல்.சமீம்(எல்.எல்.பி) உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement