• May 18 2024

ஜனநாயக போராட்டத்தை அடக்குவதற்கு பயன்படுத்தும் நிதியே, தேர்தலை நடத்த போதும்! முருகேசு சந்திரகுமார் SamugamMedia

Chithra / Feb 21st 2023, 5:59 pm
image

Advertisement

ஜனநாயக போராட்டத்தை அடக்குவதற்கு பயன்படுத்தும் நிதியே, தேர்தலை நடத்த போதும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் கிளிநொச்சியிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் என்பது அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை. அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது. இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் மக்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர். 

தேர்தலுக்கு பயந்து தான் உரிய காலத்தில் நடத்தாமல் இருந்தால் மீண்டும் மக்கள் போராட்டம் ஆரம்பிக்க நேரிடும்.  

ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி, இந்த போராட்டங்களை அடக்க நினைக்கின்றது.

ஜனநாயக போராட்டத்தை அடக்குவதற்கு பயன்படுத்தும் நிதியே தேர்தலை நடாத்துவதற்கு போதும். 

இந்த தேர்தலை நடாத்துவதன் மூலமே ஜனநாயகம் இருக்கு என்பதை காட்ட முடியும்.

தேர்தலை நடாத்தாது போகுமானால் இந்த நாடு சர்வதேச அளவில் மிகமோசமான உரிமைகளை மறுக்கும் நாடாக பட்டியலில் உள்வாங்க நேரிடும் என ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனநாயக போராட்டத்தை அடக்குவதற்கு பயன்படுத்தும் நிதியே, தேர்தலை நடத்த போதும் முருகேசு சந்திரகுமார் SamugamMedia ஜனநாயக போராட்டத்தை அடக்குவதற்கு பயன்படுத்தும் நிதியே, தேர்தலை நடத்த போதும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.அவர் கிளிநொச்சியிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.இதன்போது கருத்து தெரிவிக்கையில்,தேர்தல் என்பது அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை. அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது. இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் தான் மக்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர். தேர்தலுக்கு பயந்து தான் உரிய காலத்தில் நடத்தாமல் இருந்தால் மீண்டும் மக்கள் போராட்டம் ஆரம்பிக்க நேரிடும்.  ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி, இந்த போராட்டங்களை அடக்க நினைக்கின்றது.ஜனநாயக போராட்டத்தை அடக்குவதற்கு பயன்படுத்தும் நிதியே தேர்தலை நடாத்துவதற்கு போதும். இந்த தேர்தலை நடாத்துவதன் மூலமே ஜனநாயகம் இருக்கு என்பதை காட்ட முடியும்.தேர்தலை நடாத்தாது போகுமானால் இந்த நாடு சர்வதேச அளவில் மிகமோசமான உரிமைகளை மறுக்கும் நாடாக பட்டியலில் உள்வாங்க நேரிடும் என ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement