• May 11 2025

மன்னாரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி...!நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் போராட்டம்...!

Sharmi / Feb 19th 2024, 9:17 am
image

மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்(19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதிவழி போராட்டம் ஒன்று இடம்பெற்றது

சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும்,  விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம், இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்துங்கள், எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அதே நேரம் சிறுமியின் புகைப்படத்தையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


மன்னாரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி.நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் போராட்டம். மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்(19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதிவழி போராட்டம் ஒன்று இடம்பெற்றதுசிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும்,  விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம், இணையவழி பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்துங்கள், எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அதே நேரம் சிறுமியின் புகைப்படத்தையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now