2009- ஆண்டுக்கு முன்பிருந்த அடக்குமுறையை தமிழ் இளைஞர்களுக்கு தெரியவைத்துள்ள கோத்தா அரசு!

255

ஸ்ரீலங்கா படையின் இன்றைய நடவடிக்கைள் 2009-ம் ஆண்டிற்கு முன்னரான யுத்த சூழ்நிலையை நினைவுபடுத்தும் முன்னோட்டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பு உயிர்ப்புடன் இருந்த காலப்பகுதியாக இருக்கட்டும் அல்லது அதற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் சரி தமிழர்கள் பகுதியில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் இராணுவம் மற்றும் பொலிசாரின் பிரசன்னம் அவர்களின் கெடுபிடியான செயற்பாடுகள் உச்சத்திலிருந்து.

தற்போது 2000-ம் ஆண்டுகளுக்கு பின் பிறந்து இன்று சிறுவர்களாகவும், இளைஞர்களாகவும் இருப்பவர்களுக்கு கடந்த கால வரலாறும், இராணுவ பிரசன்னம் பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அதன் காரணத்தில்தான் என்னவோ இன்று, கோத்தா அரசுடன் கைகோர்த்து தேர்தலில் போட்டியிட்ட, டக்ளஸ், அங்கஜன், வியாழேந்திரன் போன்றோர் கடந்த தேர்தலில் வெற்றிப்பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் (27) விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த உறுப்பினர்களுக்காக ”மாவீரர் தினம்” நினைவுகூறும் நாள்.

இந்த நாளில் கடந்த வருடங்களில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்குள் சென்று உயிர்நீத்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் உறவுகள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், இலங்கையில் தற்போதுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் குறித்த நினைவுதினத்தை அனுஷ்டிப்பதற்கு தடை போட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிசாரின் பிரசன்னம் தமிழர் பகுதியில் அதிகரித்து இருக்கின்றதை பார்க்கும் இளையோருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

இன்றைய தினத்தில் இளைஞர்கள் வெளியில் வர தயங்கும் நிலை உருவாகியுள்ளதையும் காண முடிவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.