• Nov 24 2024

அரிசியின் விலையை குறைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தோற்றுவிட்டது...! சஜித் தரப்பு எம்.பி குற்றச்சாட்டு...!

Sharmi / Mar 13th 2024, 3:33 pm
image

சந்தையில் அரிசியின் விலையை குறைக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் தோற்றுப்போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் பெரும் போக பருவத்தில் பெறப்பட்ட அரிசி கையிருப்புகளை சந்தைக்கு முறையாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது அரிசியின் விலையை நியாயமான விலைக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் சரியாகச் செயற்படுமாயின் இந்நாட்டில் அரிசியின் விலை இந்நேரம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறைந்த விலையில் அரிசி வழங்கும் திறன் அரசுக்கு உள்ளது. தேவையான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள, தமிழ் புத்தாண்டை முறையாகக் கொண்டாட நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2020 க்குப் பிறகு, நாட்டில் தொடர்ச்சியான நெருக்கடிகள் ஏற்பட்டன.

அதனால் சிங்கள தமிழ் புத்தாண்டை மக்களால் சரியாக கொண்டாட முடியவில்லை. 2024 இல் கூட மக்கள் புத்தாண்டை முறையாகக் கொண்டாடும் நிலை இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டு மக்களுக்கு பிரச்சினைகள் ஏராளம். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் அரிசி பிரதானமாகிறது.

ஆனால் நாட்டில் அரிசி விலை தொடர்பில் பாரிய பிரச்சினை உள்ளது. நாட்டின் பொருளாதார நிர்வாகம் சரியாக மேற்கொள்ளப்படுமாயின்  இந்நாட்டில் அரிசியின் விலை இந்நேரம் குறைந்திருக்க வேண்டும்.

கீரி சம்பா 50,000 மெட்ரிக் டொன் இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு அரிசியின் விலை அதிகரிக்கலாம் என்பதால், அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. தற்போது 25,000 முதல் 30,000 மெட்ரிக் டொன் வரையிலான கீரி சம்பாவை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளது.

அதேபோல்,இந்த வருடம் நாட்டின் பெரும் போக பருவத்தில் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது. விவசாய அமைச்சரும் விவசாய அமைச்சும் இது குறித்து அறிவித்துள்ளன. வெற்றிகரமான அறுவடை ஏற்பட்டிருந்தால், அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், சந்தையில் அரிசியின் விலை இந்நேரம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அரிசி விலையை குறைக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் தோற்றுப்போயுள்ளது. இது பொருளாதார நிர்வாக பிரச்சினையா அல்லது சந்தையில் அரிசி மாபியாவின் பிரச்சினையா என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

2023 டிசம்பரில் ஒரு கிலோ கீரி சம்பா 245 ரூபா. தற்போது ஒரு கிலோ கீரி சம்பா 355 ரூபாவாக உள்ளது. 2023 டிசம்பரில் ஒரு கிலோ சம்பா 220 ரூபா.இன்று 263 ரூபாயாக மாறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2023 டிசம்பரில் ஒரு கிலோ நாட்டு அரிசி 190 ரூபா. இன்று ஒரு கிலோ நாட்டு அரிசி 219 ரூபாவாக ஆக உள்ளது. இதைப் பார்க்கும் போது அரிசி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி சந்தையை கட்டுப்படுத்துகின்றனர் அல்லது மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் நுகர்வோருக்கு நியாயத்தை வழங்காது, அரிசியிலிருந்து நிகர இலாபத்தை அதிகம் ஈட்டி வருகின்றனர். இது குறித்து ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

அரிசியின் விலையை குறைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தோற்றுவிட்டது. சஜித் தரப்பு எம்.பி குற்றச்சாட்டு. சந்தையில் அரிசியின் விலையை குறைக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் தோற்றுப்போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் பெரும் போக பருவத்தில் பெறப்பட்ட அரிசி கையிருப்புகளை சந்தைக்கு முறையாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது அரிசியின் விலையை நியாயமான விலைக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் சரியாகச் செயற்படுமாயின் இந்நாட்டில் அரிசியின் விலை இந்நேரம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.குறைந்த விலையில் அரிசி வழங்கும் திறன் அரசுக்கு உள்ளது. தேவையான வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள, தமிழ் புத்தாண்டை முறையாகக் கொண்டாட நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2020 க்குப் பிறகு, நாட்டில் தொடர்ச்சியான நெருக்கடிகள் ஏற்பட்டன. அதனால் சிங்கள தமிழ் புத்தாண்டை மக்களால் சரியாக கொண்டாட முடியவில்லை. 2024 இல் கூட மக்கள் புத்தாண்டை முறையாகக் கொண்டாடும் நிலை இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டு மக்களுக்கு பிரச்சினைகள் ஏராளம். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் அரிசி பிரதானமாகிறது.ஆனால் நாட்டில் அரிசி விலை தொடர்பில் பாரிய பிரச்சினை உள்ளது. நாட்டின் பொருளாதார நிர்வாகம் சரியாக மேற்கொள்ளப்படுமாயின்  இந்நாட்டில் அரிசியின் விலை இந்நேரம் குறைந்திருக்க வேண்டும். கீரி சம்பா 50,000 மெட்ரிக் டொன் இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு அரிசியின் விலை அதிகரிக்கலாம் என்பதால், அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. தற்போது 25,000 முதல் 30,000 மெட்ரிக் டொன் வரையிலான கீரி சம்பாவை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளது.அதேபோல்,இந்த வருடம் நாட்டின் பெரும் போக பருவத்தில் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது. விவசாய அமைச்சரும் விவசாய அமைச்சும் இது குறித்து அறிவித்துள்ளன. வெற்றிகரமான அறுவடை ஏற்பட்டிருந்தால், அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், சந்தையில் அரிசியின் விலை இந்நேரம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அரிசி விலையை குறைக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் தோற்றுப்போயுள்ளது. இது பொருளாதார நிர்வாக பிரச்சினையா அல்லது சந்தையில் அரிசி மாபியாவின் பிரச்சினையா என்ற பிரச்சினை எழுந்துள்ளது.2023 டிசம்பரில் ஒரு கிலோ கீரி சம்பா 245 ரூபா. தற்போது ஒரு கிலோ கீரி சம்பா 355 ரூபாவாக உள்ளது. 2023 டிசம்பரில் ஒரு கிலோ சம்பா 220 ரூபா.இன்று 263 ரூபாயாக மாறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2023 டிசம்பரில் ஒரு கிலோ நாட்டு அரிசி 190 ரூபா. இன்று ஒரு கிலோ நாட்டு அரிசி 219 ரூபாவாக ஆக உள்ளது. இதைப் பார்க்கும் போது அரிசி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி சந்தையை கட்டுப்படுத்துகின்றனர் அல்லது மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் நுகர்வோருக்கு நியாயத்தை வழங்காது, அரிசியிலிருந்து நிகர இலாபத்தை அதிகம் ஈட்டி வருகின்றனர். இது குறித்து ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement