வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி, 142 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இலக்கை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்றைய இறுதிப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஒன்றுகூடியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் பெரும் சமர்: சென்.ஜோன்ஸ் கல்லூரி வெற்றி. வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது.தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி, 142 ஓட்டங்களை பெற்றது.தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இலக்கை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இன்றைய இறுதிப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஒன்றுகூடியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.