• Nov 26 2024

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைப்பு...!

Sharmi / Jul 17th 2024, 2:01 pm
image

சுகாதார அமைச்சின்  ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(17)  யாழ் போதனா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரன கலந்து கொண்டு குறித்த நிலையத்தினையும், இயந்திர உபகரணங்களையும் வைத்தியசாலை நிபுணர்கள் குழுவினர்களிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரன தலைமையிலான குழுவினர் யாழ் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையம், சத்திரசிகிச்சை நிலையத்தை பார்வையுற்றதுடன் நோயாளர்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

அத்துடன், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, புற்றுநோய், அதனோடு இணைந்த நோய் பிரிவு,மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடப் பிரிவு,ஆவண காப்பக பகுதிகளை பார்வையுற்றதுடன் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மகிபால ஹேரத், விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசலே குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வைத்திய நிபுணர்கள், செயலாளர்கள், தாதிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைப்பு. சுகாதார அமைச்சின்  ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(17)  யாழ் போதனா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரன கலந்து கொண்டு குறித்த நிலையத்தினையும், இயந்திர உபகரணங்களையும் வைத்தியசாலை நிபுணர்கள் குழுவினர்களிடம் கையளித்தார்.அதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரன தலைமையிலான குழுவினர் யாழ் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையம், சத்திரசிகிச்சை நிலையத்தை பார்வையுற்றதுடன் நோயாளர்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தினார்.அத்துடன், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, புற்றுநோய், அதனோடு இணைந்த நோய் பிரிவு,மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடப் பிரிவு,ஆவண காப்பக பகுதிகளை பார்வையுற்றதுடன் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.இந் நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மகிபால ஹேரத், விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசலே குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வைத்திய நிபுணர்கள், செயலாளர்கள், தாதிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement