• Dec 24 2024

குன்றும் குழியுமாகக் காணப்படும் உசன் விடத்தற்பளை பிரதான வீதி - பிரதேச மக்கள் விசனம்

Tharmini / Dec 23rd 2024, 1:54 pm
image

யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட உசன் விடத்தற்பளை பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக இருப்பதாகவும்.

மழை காலங்களில் குறித்த வீதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் போக்குவரத்திற்காக வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட இந்த வீதியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலுள்ள குறித்த வீதியில் தற்போது வெள்ளநீர் தேங்கி நிற்கின்றது.

அதேவேளை குன்றும் குழியுமாகக் காணப்படுவதால் மக்கள் போக்கு வரத்துக்காக பெரும் சிரமப்படுகின்றனர்.

இந்த வீதியை புனரமைத்து தருவதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையிலும் இவ்வளவு காலமாக எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 2025 ஆம் ஆண்டில் வீதியை புனரமைத்து தராதுவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.






குன்றும் குழியுமாகக் காணப்படும் உசன் விடத்தற்பளை பிரதான வீதி - பிரதேச மக்கள் விசனம் யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட உசன் விடத்தற்பளை பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக இருப்பதாகவும். மழை காலங்களில் குறித்த வீதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் போக்குவரத்திற்காக வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட இந்த வீதியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையிலுள்ள குறித்த வீதியில் தற்போது வெள்ளநீர் தேங்கி நிற்கின்றது.அதேவேளை குன்றும் குழியுமாகக் காணப்படுவதால் மக்கள் போக்கு வரத்துக்காக பெரும் சிரமப்படுகின்றனர்.இந்த வீதியை புனரமைத்து தருவதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையிலும் இவ்வளவு காலமாக எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.அத்துடன் 2025 ஆம் ஆண்டில் வீதியை புனரமைத்து தராதுவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement