• Jan 13 2025

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!

Chithra / Dec 11th 2024, 11:42 am
image

 

களுத்துறை - வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். 

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தின்போது அந்த வீடு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

எவ்வாறிருப்பினும், தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது கீழே விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு  களுத்துறை - வாதுவை, பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தின்போது அந்த வீடு தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும், தீ விபத்தில் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது கீழே விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement