• May 18 2024

வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை இலங்கைக்கு கொண்டுவரும் விவகாரம் - தூதுவர் தெரிவிப்பது என்ன?

Tamil nila / Dec 5th 2022, 2:56 pm
image

Advertisement

வியட்நாமில் கடந்த மாதம் உயிரிழந்த இலங்கை தமிழர் ஒருவரின் உடலை நாட்டிற்கு கொண்டுவருவது குறித்து அரசாங்கம் சர்வதேச புலம்பெயர் அமைப்புடனும் வியட்நாமிய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.


தென்சீன கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்டுவியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்;கப்பட்ட 303 அகதிகளில் ஒருவர் தற்கொலை முயற்சியை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார் என வியட்நாமிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.




உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு அனுப்புமாறு அவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார் என வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் பிரசன்ன கமகே தெரிவித்துள்ளார்.


உள்ளுர் அதிகாரிகளிடமும் ஐஓஎம் உடனும் நாங்கள் உடலை இலங்கைக்கு அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் உள்ளுர் அதிகாரிகளும் ஐஒஎம்மும் அதற்கு ஆதரவளிக்கவில்லை என அறியமுடிகின்றது சானிட்டைசரை தண்ணீர்pல் கலந்து அருந்திய மற்றுமொரு நபர் உயிர்பிழைத்துவிட்டார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.


உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு பெருமளவு பணம் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் சிலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்,எவ்வளவு பேர்  இலங்கை திரும்ப விரும்புகின்றனர் என அறியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துளளார்.


வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் உடலை இலங்கைக்கு கொண்டுவரும் விவகாரம் - தூதுவர் தெரிவிப்பது என்ன வியட்நாமில் கடந்த மாதம் உயிரிழந்த இலங்கை தமிழர் ஒருவரின் உடலை நாட்டிற்கு கொண்டுவருவது குறித்து அரசாங்கம் சர்வதேச புலம்பெயர் அமைப்புடனும் வியட்நாமிய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.தென்சீன கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்டுவியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்;கப்பட்ட 303 அகதிகளில் ஒருவர் தற்கொலை முயற்சியை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார் என வியட்நாமிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு அனுப்புமாறு அவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார் என வியட்நாமிற்கான இலங்கை தூதுவர் பிரசன்ன கமகே தெரிவித்துள்ளார்.உள்ளுர் அதிகாரிகளிடமும் ஐஓஎம் உடனும் நாங்கள் உடலை இலங்கைக்கு அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.எனினும் உள்ளுர் அதிகாரிகளும் ஐஒஎம்மும் அதற்கு ஆதரவளிக்கவில்லை என அறியமுடிகின்றது சானிட்டைசரை தண்ணீர்pல் கலந்து அருந்திய மற்றுமொரு நபர் உயிர்பிழைத்துவிட்டார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு பெருமளவு பணம் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் சிலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்,எவ்வளவு பேர்  இலங்கை திரும்ப விரும்புகின்றனர் என அறியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துளளார்.

Advertisement

Advertisement

Advertisement