• May 18 2024

மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டம்! யாழில் தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் தெரிவிப்பு samugammedia

Chithra / Jun 21st 2023, 7:05 am
image

Advertisement

 நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே ஊடக ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமாதானத்துக்கான அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில்  புதிதாக  இரண்டு சட்டங்கள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதச் சட்டத்தை நீக்கி அதை விட ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்பச்  சட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டமூலம் தயார் செய்யப்பட்டு விட்டது.

அதேபோன்று மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதிக்கும் ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் குறித்த இரு சட்டமூலங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியபோதும் இலங்கை அரசாங்கம் அதனை செய்வதாகத் தெரியவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் வாழுகின்ற மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் ஒழிப்பதற்காக அதனை ஒளிபரப்பும் ஊடகங்களை குறிவைத்து  குறித்த சட்டத்தினால் அரசாங்கம் தடுக்க எண்ணுகிறது.

அரசாங்கத்தின் ஊழல் நிர்வாக முறைகேடு என்பவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தும்போது ஊடகங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்தாகும் வாய்ப்பும் அல்லது தடை செய்வதற்கான சூழல் உருவாகும் .

தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய சமாதான பேரவையானது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் மத நல்லிணக்கத்திற்கான குழுக்கள் செயற்பாட்டு கொண்டிருக்கின்றன.

அதன் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்திலும் சர்வ மதத் தலைவர்களை ஒன்றிணைத்து இன  மற்றும் மத நல்லிணக்கத்தை அறிவுறுத்தி அமைதி வழி ஊர்வலத்தை முன்னெடுத்தோம்.

நாட்டில் மதங்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்துவதற்காக சிலர் நாம் தான் ஆதிக்குடிகள் சிலர் நாம் தான் எண்ணிக்கையில் கூடியவர்கள்  என வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறார்கள்.

இது எமக்குத் தேவையற்ற விடையம் ஏனெனில் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற நீதியில் ஒற்றுமையுடன் பயணிப்பதே காலத்தின் தேவையாக உள்ள நிலையில் சரியான முறையில் அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.

எல்லா இனங்களும் மதங்களும் மதிக்கத்தக்க வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடம் பெறுவதோடு அதனை நிறைவேற்றுவதற்கு மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

21 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பணியகம் ஒன்றை அமைப்பதன் மூலம் இன மதங்களுக்கு இடையிலான உறவுப் பாலத்தை கட்டி எழுப்ப முடியும்.

ஆகவே அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கிழைக்கக் கூடிய சட்டங்களை தவிர்த்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கான நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டம் யாழில் தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் தெரிவிப்பு samugammedia  நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே ஊடக ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார்.செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமாதானத்துக்கான அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில்  புதிதாக  இரண்டு சட்டங்கள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதச் சட்டத்தை நீக்கி அதை விட ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்பச்  சட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டமூலம் தயார் செய்யப்பட்டு விட்டது.அதேபோன்று மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதிக்கும் ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.ஐரோப்பிய ஒன்றியம் குறித்த இரு சட்டமூலங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியபோதும் இலங்கை அரசாங்கம் அதனை செய்வதாகத் தெரியவில்லை.ஒரு ஜனநாயக நாட்டில் வாழுகின்ற மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் ஒழிப்பதற்காக அதனை ஒளிபரப்பும் ஊடகங்களை குறிவைத்து  குறித்த சட்டத்தினால் அரசாங்கம் தடுக்க எண்ணுகிறது.அரசாங்கத்தின் ஊழல் நிர்வாக முறைகேடு என்பவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தும்போது ஊடகங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்தாகும் வாய்ப்பும் அல்லது தடை செய்வதற்கான சூழல் உருவாகும் .தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய சமாதான பேரவையானது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் மத நல்லிணக்கத்திற்கான குழுக்கள் செயற்பாட்டு கொண்டிருக்கின்றன.அதன் ஒரு அங்கமாக யாழ் மாவட்டத்திலும் சர்வ மதத் தலைவர்களை ஒன்றிணைத்து இன  மற்றும் மத நல்லிணக்கத்தை அறிவுறுத்தி அமைதி வழி ஊர்வலத்தை முன்னெடுத்தோம்.நாட்டில் மதங்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்துவதற்காக சிலர் நாம் தான் ஆதிக்குடிகள் சிலர் நாம் தான் எண்ணிக்கையில் கூடியவர்கள்  என வாதப் பிரதிவாதங்களை முன் வைக்கிறார்கள்.இது எமக்குத் தேவையற்ற விடையம் ஏனெனில் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற நீதியில் ஒற்றுமையுடன் பயணிப்பதே காலத்தின் தேவையாக உள்ள நிலையில் சரியான முறையில் அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.எல்லா இனங்களும் மதங்களும் மதிக்கத்தக்க வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடம் பெறுவதோடு அதனை நிறைவேற்றுவதற்கு மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.21 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பணியகம் ஒன்றை அமைப்பதன் மூலம் இன மதங்களுக்கு இடையிலான உறவுப் பாலத்தை கட்டி எழுப்ப முடியும்.ஆகவே அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கிழைக்கக் கூடிய சட்டங்களை தவிர்த்து மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கான நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement