• May 18 2024

கனடாவில் இளைஞர்களை பாதிக்கும் மர்ம நோய் - என்ன காரணம்? samugammedia

Tamil nila / Jul 4th 2023, 8:21 pm
image

Advertisement

கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்துவருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பதுபோல் தோன்றச் செய்வது, தசைச் சிதைவு, பார்வை பிரச்சினைகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் சில நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த மூளைப் பிரச்சினை குறிப்பாக இளைஞர்களை பாதித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

நரம்பியல் நிபுணரான Dr. Alier Marrero மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி இந்த மூளைப் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த களைக்கொல்லி, விவசாயம், காடுகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துமாறு, பாதிக்கப்பட்ட New Brunswickஐச் சேர்ந்த நோயாளிகள் குழு ஒன்று, பெடரல் மற்றும் மாகாண அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கனடாவில் இளைஞர்களை பாதிக்கும் மர்ம நோய் - என்ன காரணம் samugammedia கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்துவருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பதுபோல் தோன்றச் செய்வது, தசைச் சிதைவு, பார்வை பிரச்சினைகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் சில நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.இந்த மூளைப் பிரச்சினை குறிப்பாக இளைஞர்களை பாதித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.நரம்பியல் நிபுணரான Dr. Alier Marrero மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி இந்த மூளைப் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த களைக்கொல்லி, விவசாயம், காடுகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துமாறு, பாதிக்கப்பட்ட New Brunswickஐச் சேர்ந்த நோயாளிகள் குழு ஒன்று, பெடரல் மற்றும் மாகாண அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement