• Apr 20 2025

Sharmi / Feb 21st 2025, 5:26 pm
image

சேருநுவர கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள அல்-ஹுதா விவசா சம்மேளனப் பிரிவில் இம்முறை 280 ஏக்கரில் மேற் கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கையின் "நெல் அறுவடை விழா" இன்று(21) காலை இடம்பெற்றது.

இதனை அல் -ஹுதா விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது நெல் அறுவடையானது அதிதிகள் விவசாயிகளால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன் நெல் அறுவடை சிறந்து விளங்க விசேட சமயப் பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சேருநுவர கமநல சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.நௌபர் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், வதிவிட திட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், கமநல சேவை உத்தியோகத்தர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திருமலையில் களைகட்டிய 'நெல் அறுவடை விழா'. சேருநுவர கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள அல்-ஹுதா விவசா சம்மேளனப் பிரிவில் இம்முறை 280 ஏக்கரில் மேற் கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கையின் "நெல் அறுவடை விழா" இன்று(21) காலை இடம்பெற்றது.இதனை அல் -ஹுதா விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது நெல் அறுவடையானது அதிதிகள் விவசாயிகளால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.அத்துடன் நெல் அறுவடை சிறந்து விளங்க விசேட சமயப் பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந்நிகழ்வில் சேருநுவர கமநல சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.நௌபர் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.ஏனைய அதிதிகளாக நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், வதிவிட திட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், கமநல சேவை உத்தியோகத்தர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement