• May 12 2024

முக்கிய நாடுகளின் பேச்சில் இறங்கிய உக்ரைன் ஜனாதிபதி

harsha / Dec 12th 2022, 6:31 pm
image

Advertisement

உக்ரைன் ஜனாதிபதி விளேடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துருக்கி மற்றும் பிரான்ஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.


உக்ரைனின் நெருக்கடி நிலைமையை தீர்க்கும் சர்வதேச நிகழ்வுகளின் தொடரிலிருந்து அடுத்த வாரம் முக்கியமான தீர்வுகளை தாம் எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாத பிற்பகுதியில் ரஷ்ய படையெடுப்பிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஆகியோருடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

அத்துடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு மற்றும் நிதி உதவிக்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், நாட்டு மக்களைப் பாதுகாக்க பயனுள்ள விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை பெற்றுக் கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதியிடம் பேசியதாகவும் உக்ரைன் ஜனாதிபதி சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துருக்கிய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேற்று நடத்திய தொலைபேசிக் கலந்துரையாடலின் போது மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்த போதும், மேற்கத்திய நாடுகளின் மீதான நம்பிக்கையை மொஸ்கோ முழுவதுமாக இழந்துவிட்டதால், உக்ரைன் தொடர்பான இறுதித் தீர்வை எட்டுவது மிகவும் கடினமாகி விடும் என்று புட்டின் கடந்த வாரம் தெரிவித்திருந்ததுடன், நீடித்த போர் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய நாடுகளின் பேச்சில் இறங்கிய உக்ரைன் ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி விளேடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துருக்கி மற்றும் பிரான்ஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.உக்ரைனின் நெருக்கடி நிலைமையை தீர்க்கும் சர்வதேச நிகழ்வுகளின் தொடரிலிருந்து அடுத்த வாரம் முக்கியமான தீர்வுகளை தாம் எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கடந்த பெப்ரவரி மாத பிற்பகுதியில் ரஷ்ய படையெடுப்பிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஆகியோருடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.அத்துடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு மற்றும் நிதி உதவிக்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், நாட்டு மக்களைப் பாதுகாக்க பயனுள்ள விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை பெற்றுக் கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதியிடம் பேசியதாகவும் உக்ரைன் ஜனாதிபதி சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை, துருக்கிய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேற்று நடத்திய தொலைபேசிக் கலந்துரையாடலின் போது மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இருந்த போதும், மேற்கத்திய நாடுகளின் மீதான நம்பிக்கையை மொஸ்கோ முழுவதுமாக இழந்துவிட்டதால், உக்ரைன் தொடர்பான இறுதித் தீர்வை எட்டுவது மிகவும் கடினமாகி விடும் என்று புட்டின் கடந்த வாரம் தெரிவித்திருந்ததுடன், நீடித்த போர் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement