• May 19 2024

"உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல்" இல் பங்கேற்கிறார் ஜனாதிபதி!

Chithra / Jan 12th 2023, 10:29 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) இந்தியாவினால் நடைபெறவுள்ள “Voice of Global South Summit” "உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல்" இல் பங்கேற்கவுள்ளார்.

ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில் இன்று பங்குபற்றுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 20 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

அண்டை நாடுகளின் தலைவர்கள் தவிர, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள், ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் தலைவர்கள், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல்" இல் பங்கேற்கிறார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) இந்தியாவினால் நடைபெறவுள்ள “Voice of Global South Summit” "உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல்" இல் பங்கேற்கவுள்ளார்.ஜூம் தொழிநுட்பம் ஊடாக ஜனாதிபதி இந்த மாநாட்டில் இன்று பங்குபற்றுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 20 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.அண்டை நாடுகளின் தலைவர்கள் தவிர, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள், ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் தலைவர்கள், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement