• May 05 2024

அஜித்தின் அசத்தலான பொங்கல் பரிசாக வெளியான துணிவு- திரைவிமர்சனம்!

Sharmi / Jan 12th 2023, 10:37 am
image

Advertisement

வினோத்குமாரின் இயக்கத்தில் ஜிப்ரானின் இசையில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும்  பேவியூ புராஜக்ட்ஸ் தயாரிப்பில்  நடிகர் அஜித்குமார் மற்றும் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களின் நடிப்பில் உருவான படம்தான் துணிவு.

துணிவு திரைப்படமானது உலகெங்கும் நேற்று அதிகாலை வெளியானது.

கடந்த சில மாதங்களாகவே பல இலட்சக்கணக்கான அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த  துணிவு திரைப்படத்தின் முதல் ஷோவை பார்வையிட நேற்று நள்ளிரவு முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்குகளின் முன்னால் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் துணிவு திரைப்படத்தை பார்வையிட்ட தல  ரசிகர்கள் படம் வேற லெவல் மாஸ் மூவி என்றவாறாக கருத்துக்களை பதிவு செய்து  வருகின்றனர்.


இந்நிலையில் துணிவு படம் எப்படி இருக்கு என்று வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

சென்னையில் ஒரு தனியார் வங்கியை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் போலிஸ் உதவியுடன் கொள்ளையடிக்க வருகிறது. வந்த இடத்தில் அவர்களுக்கே தெரியாமல் அந்த பேங்கை அஜித் கொள்ளையடிக்க மஞ்சு வாரியருடன் ஒரு ப்ளான் போடுகிறார்.

அஜித்துடன் போலிஸ் பேச்சு வார்த்தை நடத்தஇ ஒரு கட்டத்தில் அந்த வங்கியில் மிகப்பெரிய எக்ப்ளோசிவ் பாம் கிடைக்கிறது. அப்போது தான் தெரிகிறது உள்ளே மூன்றாவதாக ஒரு டீம் இருக்கிறது என பிறகு இந்த அயோக்கியர்களுக்குள் நடக்கும் ஆட்டம் தான் மீதிக்கதை.

படம் குறித்த அலசல்

அஜித் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் என்றாலே செம குஷியாக ஆகிவிடுகிறார். தனது மேனரிசம், டயலாக் டெலிவெரி என பட்டாசு கிளப்புகிறார். அதிலும் பேங்க் உள்ளே சென்று அவர் செய்யும் சேட்டைகள் கலகலப்புக்கு பஞ்சமில்லை எனலாம்.

படத்தில் ஒரு பேங்கில் நடக்கும் மோசடியை வெளியே கொண்டு வர நடக்கும் கதை தான். இதற்காக வினோத் எளிய மக்களுக்கும் புரியும் படி பேங்க்-ல நடக்கும் விஷயங்களை குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதில் நடக்கும் குளறுபடிகளை தோல் உரித்து காட்டியுள்ளார்.


படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் வசனங்கள் மூலம் ஈர்க்கின்றனர். அதிலும் மைபா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரம் கலக்கலாக உள்ளது. படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக் காட்சிகள் தான்.

ஜிப்ரானின் பின்னணி இசை சில இடங்களில் டயலாக்கை தாண்டி கொஞ்சம் இரைச்சலை தருகிறது.படத்தின் முதற்பாதி முழுவதும் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இருக்காது. இரண்டாம் பாதி 10 நிமிடம் சோர்வை தந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பை தருகிறது.

படத்தின் முதல்பாதி அஜித்தின் நடிப்பு, ஒவ்வொரு காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் அஜித்தின் மேஜிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் அசத்தலான பொங்கல் பரிசாக வெளியான துணிவு- திரைவிமர்சனம் வினோத்குமாரின் இயக்கத்தில் ஜிப்ரானின் இசையில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும்  பேவியூ புராஜக்ட்ஸ் தயாரிப்பில்  நடிகர் அஜித்குமார் மற்றும் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களின் நடிப்பில் உருவான படம்தான் துணிவு.துணிவு திரைப்படமானது உலகெங்கும் நேற்று அதிகாலை வெளியானது.கடந்த சில மாதங்களாகவே பல இலட்சக்கணக்கான அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த  துணிவு திரைப்படத்தின் முதல் ஷோவை பார்வையிட நேற்று நள்ளிரவு முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்குகளின் முன்னால் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.இவ்வாறான நிலையில் நேற்றையதினம் துணிவு திரைப்படத்தை பார்வையிட்ட தல  ரசிகர்கள் படம் வேற லெவல் மாஸ் மூவி என்றவாறாக கருத்துக்களை பதிவு செய்து  வருகின்றனர்.இந்நிலையில் துணிவு படம் எப்படி இருக்கு என்று வாங்க பார்க்கலாம்.கதைக்களம்சென்னையில் ஒரு தனியார் வங்கியை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் போலிஸ் உதவியுடன் கொள்ளையடிக்க வருகிறது. வந்த இடத்தில் அவர்களுக்கே தெரியாமல் அந்த பேங்கை அஜித் கொள்ளையடிக்க மஞ்சு வாரியருடன் ஒரு ப்ளான் போடுகிறார்.அஜித்துடன் போலிஸ் பேச்சு வார்த்தை நடத்தஇ ஒரு கட்டத்தில் அந்த வங்கியில் மிகப்பெரிய எக்ப்ளோசிவ் பாம் கிடைக்கிறது. அப்போது தான் தெரிகிறது உள்ளே மூன்றாவதாக ஒரு டீம் இருக்கிறது என பிறகு இந்த அயோக்கியர்களுக்குள் நடக்கும் ஆட்டம் தான் மீதிக்கதை.படம் குறித்த அலசல்அஜித் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் என்றாலே செம குஷியாக ஆகிவிடுகிறார். தனது மேனரிசம், டயலாக் டெலிவெரி என பட்டாசு கிளப்புகிறார். அதிலும் பேங்க் உள்ளே சென்று அவர் செய்யும் சேட்டைகள் கலகலப்புக்கு பஞ்சமில்லை எனலாம்.படத்தில் ஒரு பேங்கில் நடக்கும் மோசடியை வெளியே கொண்டு வர நடக்கும் கதை தான். இதற்காக வினோத் எளிய மக்களுக்கும் புரியும் படி பேங்க்-ல நடக்கும் விஷயங்களை குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதில் நடக்கும் குளறுபடிகளை தோல் உரித்து காட்டியுள்ளார்.படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் வசனங்கள் மூலம் ஈர்க்கின்றனர். அதிலும் மைபா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரம் கலக்கலாக உள்ளது. படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக் காட்சிகள் தான்.ஜிப்ரானின் பின்னணி இசை சில இடங்களில் டயலாக்கை தாண்டி கொஞ்சம் இரைச்சலை தருகிறது.படத்தின் முதற்பாதி முழுவதும் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இருக்காது. இரண்டாம் பாதி 10 நிமிடம் சோர்வை தந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பை தருகிறது.படத்தின் முதல்பாதி அஜித்தின் நடிப்பு, ஒவ்வொரு காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் அஜித்தின் மேஜிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement