• Sep 07 2025

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் எசல மகா பெரஹெராவை மக்களுடன் சேர்ந்து பார்வையிட்ட ஜனாதிபதி

Chithra / Sep 7th 2025, 3:13 pm
image

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெராவைப் பார்வையிட ஜனாதிபதி இணைந்துகொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரை மற்றும் ஸ்ரீ சுமன சமன் மகா விகாரையில் 2025ஆம் ஆண்டிற்கான எசல மகா பெரஹெரவிற்காக நேற்று (06) பிற்பகல் மஹியங்கனை புனித ஸ்தலத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மத அனுஷ்டானங்களை நிறைவேற்றி ஆசிர்வாதம் பெற்றார். 

பின்னர் ஜனாதிபதி, அஸ்கிரி விகாரை தரப்பின் சிரேஷ்ட குழு உறுப்பினர், மஹியங்கனை ரஜமகா விகாரையின்விகாராதிபதி உருளேவத்தே ஸ்ரீ தம்மரக்கித நாயக்க தேரரை சந்தித்து, அவரது நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

தேரர் இதன்போது, ஜனாதிபதிக்கு தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்ததுடன், சிறப்பு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

2025ஆம் ஆண்டிற்கான எசல மகா பெரஹெராவின் நான்காவது ரந்தோலி பெரஹெராவின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஹஸ்தி ராஜா யானை மீது புனித கலசத்தை வைத்த ஜனாதிபதி, பிரதேச மக்களுடன் பெரஹெராவைக் காண இணைந்துகொண்டார்.


மஹியங்கனை ரஜமஹா விகாரையின் எசல மகா பெரஹெராவை மக்களுடன் சேர்ந்து பார்வையிட்ட ஜனாதிபதி வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெராவைப் பார்வையிட ஜனாதிபதி இணைந்துகொண்டார்.வரலாற்று சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரை மற்றும் ஸ்ரீ சுமன சமன் மகா விகாரையில் 2025ஆம் ஆண்டிற்கான எசல மகா பெரஹெரவிற்காக நேற்று (06) பிற்பகல் மஹியங்கனை புனித ஸ்தலத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மத அனுஷ்டானங்களை நிறைவேற்றி ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் ஜனாதிபதி, அஸ்கிரி விகாரை தரப்பின் சிரேஷ்ட குழு உறுப்பினர், மஹியங்கனை ரஜமகா விகாரையின்விகாராதிபதி உருளேவத்தே ஸ்ரீ தம்மரக்கித நாயக்க தேரரை சந்தித்து, அவரது நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.தேரர் இதன்போது, ஜனாதிபதிக்கு தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்ததுடன், சிறப்பு நினைவுப் பரிசையும் வழங்கினார்.2025ஆம் ஆண்டிற்கான எசல மகா பெரஹெராவின் நான்காவது ரந்தோலி பெரஹெராவின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஹஸ்தி ராஜா யானை மீது புனித கலசத்தை வைத்த ஜனாதிபதி, பிரதேச மக்களுடன் பெரஹெராவைக் காண இணைந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement