• Nov 17 2024

மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு...!

Sharmi / Jul 16th 2024, 10:34 am
image

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலைமைகள் தொடர்பில் நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

நீர்த்தேக்கங்களுக்கு நீர் வழங்கும் நீர் ஆதாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதன்படி, இன்றையதினம் காலை 6.00 மணியளவில் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்திலிருந்து 2 அடி 02 அங்குலமாகவும், காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 06 அடி 03 அங்குலமாக வான் மட்டத்திலிருந்து 06 அடி 03 அங்குலமாகவும் காணப்படுகின்றது.

இந்த நீர்த்தேக்கங்களின் நீரை முடிந்தவரை அந்தந்த நீர்மின் நிலையங்களுக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.இந்த நிலைமைகள் தொடர்பில் நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,நீர்த்தேக்கங்களுக்கு நீர் வழங்கும் நீர் ஆதாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்து வருவதாகத் தெரிவித்தார்.இதன்படி, இன்றையதினம் காலை 6.00 மணியளவில் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்திலிருந்து 2 அடி 02 அங்குலமாகவும், காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 06 அடி 03 அங்குலமாக வான் மட்டத்திலிருந்து 06 அடி 03 அங்குலமாகவும் காணப்படுகின்றது.இந்த நீர்த்தேக்கங்களின் நீரை முடிந்தவரை அந்தந்த நீர்மின் நிலையங்களுக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement