• Apr 26 2024

இலங்கைக்கு எதிராக உலகமே வழக்கு தொடரும் நிலையில் உள்ளது – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்.! SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 5:19 pm
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாளையதினம் இலங்கை கடனை பெறவில்லை எனில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு திவாலாகிவிடும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


களுத்துறை விமானப்படை தளத்தில் சாரதிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறை பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


கடனை அடைக்க முடியாத நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் தற்போது இலங்கைக்கு எதிராக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம்.


ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதமர், ஒரு அரசியல்வாதி பொறுப்பேற்க முடியாது. சுதந்திரத்திற்குப் பின்னர் குறிப்பாக 77க்குப் பின்னர், நாம் உலகத்திலிருந்து கடன் வாங்கினோம். 


அவர்களால் பணம் செலுத்த முடியாத நிலையில், பணம் அச்சிடப்பட்டது. இது தொடர்ந்து செய்யப்பட்டது. எனவே, இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது.


அதனால்தான் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவருவதற்கு உதவுமாறு உலகத்திடம் கேட்டோம். 

இதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் இருந்து 20 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கு எதிராக உலகமே வழக்கு தொடரும் நிலையில் உள்ளது – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர். SamugamMedia சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாளையதினம் இலங்கை கடனை பெறவில்லை எனில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு திவாலாகிவிடும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.களுத்துறை விமானப்படை தளத்தில் சாரதிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறை பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.கடனை அடைக்க முடியாத நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் தற்போது இலங்கைக்கு எதிராக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம்.ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதமர், ஒரு அரசியல்வாதி பொறுப்பேற்க முடியாது. சுதந்திரத்திற்குப் பின்னர் குறிப்பாக 77க்குப் பின்னர், நாம் உலகத்திலிருந்து கடன் வாங்கினோம். அவர்களால் பணம் செலுத்த முடியாத நிலையில், பணம் அச்சிடப்பட்டது. இது தொடர்ந்து செய்யப்பட்டது. எனவே, இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது.அதனால்தான் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவருவதற்கு உதவுமாறு உலகத்திடம் கேட்டோம். இதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் இருந்து 20 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement