உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் சமகாலத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் சற்று ஆராய வேண்டியுள்ளதாக என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பொதுத் தேர்தலில் பொதுவாக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்திருந்த வேளையிலே, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி இருந்தார்கள்.
கடந்த மூன்று நான்கு மாதங்களில் அரசாங்கம் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றது என்பதை தொடரில் தமிழ் மக்கள் சற்று கூர்ந்து ஆராய வேண்டிய நிலைமை இருக்கின்றது.
வரவு செலவுத் திட்டத்திலேயே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த காலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகளை விட குறிப்பிடப்பட்ட அளவிலேயே எந்த விதமான நிதி ஒதுக்கீடுகளும் குறிப்பாக விசேட வேலைத்திட்டங்களில் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இம்முறை பட்ஜெட்டில் கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள் இல்லை: சிறிநாத் ஆதங்கம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் சமகாலத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் சற்று ஆராய வேண்டியுள்ளதாக என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த பொதுத் தேர்தலில் பொதுவாக மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்திருந்த வேளையிலே, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி இருந்தார்கள். கடந்த மூன்று நான்கு மாதங்களில் அரசாங்கம் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றது என்பதை தொடரில் தமிழ் மக்கள் சற்று கூர்ந்து ஆராய வேண்டிய நிலைமை இருக்கின்றது.வரவு செலவுத் திட்டத்திலேயே கிழக்கு மாகாணத்திற்கென பாரிய நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த காலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகளை விட குறிப்பிடப்பட்ட அளவிலேயே எந்த விதமான நிதி ஒதுக்கீடுகளும் குறிப்பாக விசேட வேலைத்திட்டங்களில் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.