• Nov 25 2024

இந்தியாவில் பரதநாட்டியத்திற்கு பட்டப்படிப்பு வருவதற்கு முன்னரே யாழில் பட்டப்படிப்பு உள்ளது - சிங்கப்பூர் கலை நிறுவன இயக்குநர் பெருமிதம்!samugammedia

Tamil nila / Dec 13th 2023, 10:27 pm
image

இந்தியாவில் கூட பரதநாட்டியத்துக்கு அண்மையில் தான் பட்டப்படிப்பு கிடைத்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இராமநாதன் நுண்கலை பீடத்தில் பரதநாட்டியத்திற்கும் கர்நாடகா சங்கீதத்துக்கும் பட்டப்படிப்பு இருப்பதையிட்டு நான் பெருமை அடைகிறேன் என சிங்கப்பூர் அப்சரா கலை மன்ற இயக்குனர் அரவிந்த் குமாரசாமி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்திய கலாச்சார நிலையத்தில் நேற்றைய தினம் அரங்கேற்றப்பட்ட அமரா நாட்டிய நடனம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவிலுள்ள பிரபல நடனப் பள்ளியான கலாச்சேத்திராவில் கூட நடனத்துக்கான பட்டதாரி சான்றிதழ் கிடையாது டிப்ளோமோ சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பிரபல கலைஞர்களான மகாராஜாபுரம் விஸ்வநாதர் தஞ்சை நால்வரின் பேரன் ஆகியோர் இலங்கையில் தமது ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியை மேற்கொண்டனர்.

நாம் அவதானித்ததில் யாழ்ப்பாணத்தில் கலைத்துறை சார்ந்த பக்குவத்தன்மை பொருந்திய ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர் அவர்களுக்கு ஆற்றுகை செய்வதற்குரிய களத்தை அமைத்துக் கொடுத்தால் கலைத்துறையில் மாணவர்கள் பிரகாசிப்பார்கள்.

ஆகவே சிங்கப்பூரில் உள்ள எமது அப்சரா கலைக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் உள்ள நடன கலை மாணவர்களுக்கு எமது நாட்டில் கலை அனுபவத்தை வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் பரதநாட்டியத்திற்கு பட்டப்படிப்பு வருவதற்கு முன்னரே யாழில் பட்டப்படிப்பு உள்ளது - சிங்கப்பூர் கலை நிறுவன இயக்குநர் பெருமிதம்samugammedia இந்தியாவில் கூட பரதநாட்டியத்துக்கு அண்மையில் தான் பட்டப்படிப்பு கிடைத்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இராமநாதன் நுண்கலை பீடத்தில் பரதநாட்டியத்திற்கும் கர்நாடகா சங்கீதத்துக்கும் பட்டப்படிப்பு இருப்பதையிட்டு நான் பெருமை அடைகிறேன் என சிங்கப்பூர் அப்சரா கலை மன்ற இயக்குனர் அரவிந்த் குமாரசாமி தெரிவித்தார்.யாழ்ப்பாணம் இந்திய கலாச்சார நிலையத்தில் நேற்றைய தினம் அரங்கேற்றப்பட்ட அமரா நாட்டிய நடனம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவிலுள்ள பிரபல நடனப் பள்ளியான கலாச்சேத்திராவில் கூட நடனத்துக்கான பட்டதாரி சான்றிதழ் கிடையாது டிப்ளோமோ சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது.இந்தியாவில் பிரபல கலைஞர்களான மகாராஜாபுரம் விஸ்வநாதர் தஞ்சை நால்வரின் பேரன் ஆகியோர் இலங்கையில் தமது ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியை மேற்கொண்டனர்.நாம் அவதானித்ததில் யாழ்ப்பாணத்தில் கலைத்துறை சார்ந்த பக்குவத்தன்மை பொருந்திய ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர் அவர்களுக்கு ஆற்றுகை செய்வதற்குரிய களத்தை அமைத்துக் கொடுத்தால் கலைத்துறையில் மாணவர்கள் பிரகாசிப்பார்கள்.ஆகவே சிங்கப்பூரில் உள்ள எமது அப்சரா கலைக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் உள்ள நடன கலை மாணவர்களுக்கு எமது நாட்டில் கலை அனுபவத்தை வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement