வீட்டுத்திட்டம் தொடர்பில் தாரை தப்பட்டை அடிக்கவுமில்லை, தனியுரிமை தொடர்பில் அறிக்கை விடவுமில்லை - ஜானாதிபதியே அதற்கான சூழலை உருவாக்கினார் - ஜீவன் தொண்டமான்..!samugammedia
வரப்போகும் தேர்தலில் ஜனாதிபதி யாராக இருந்தாலும், வேலை செய்யப்போகின்ற திறமை இருந்தாக வேண்டும். அப்படி உள்ளவர்களுக்கே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை வலுவூட்டலின் ஊடாக பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் திருகோணமலையில் இன்று (10) இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தொழிலாளரின் ஆதரவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாட்டை அதன் உயர்மட்டம் தான் சேர்ந்து முடிவு பண்ண வேண்டும். எமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை ஏற்கனவே கட்சி உயர் பீடத்துக்கு அறிவித்து விட்டேன். அது பற்றி நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். ஆனால் என்னை பொறுத்தவரையில் ஒரு பொதுச் செயலாளரோ சரி, அமைச்சரவையில் உள்ள அமைச்சரோ சரி, ரணில் விக்கிரமசிங்கவிடம் மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதில் முதலாவது விடயம், வீட்டு திட்டத்தை அமுல்படுத்தியாக வேண்டும். இன்று 10000 வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சூழலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியிருக்கிறார்.
அடுத்தது, இந்த சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று வேண்டும். இப்போது தொழிலமைச்சர் சம்பள நிர்ணய சபை ஊடாக 1200 சம்பளம் வழங்குவதாக தீர்மானித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு தான். நிரந்தர தீர்வு என்ன என்பதை ஜனாதிபதி கட்டாயம் நிரூபித்தாக வேண்டும். கட்டாயம் செயல் முறைக்கும் கொண்டு வந்தாக வேண்டும்.
இறுதியாக மிக முக்கியமான விடயம் காணியுரிமை, ஜனாதிபதி இது சம்பந்தமாக 4200 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். நாளைய தினம் உறுதிப் பத்திரம் வழங்குகின்ற சூழலை உருவாக்கினால், அதனுடன் சேர்த்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் கேட்டால் எங்கள் ஆதரவு அவருக்கு இருக்கும்.
அத்துடன் வரப்போகும் தேர்தலில் ஜனாதிபதி யாராக இருந்தாலும், வேலை செய்யப்போகின்ற திறமை இருந்தாக வேண்டும். ஒரு வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதாக நான் தாரை தப்பட்டை அடித்து சுற்றியிருந்தேனா? அப்படி இல்லை. ஜனாதிபதி சூழலை உருவாக்கினார். நாங்கள் அதனை அமுல்படுத்தினோம். அதே போல காணி உரிமை சம்பந்தமாக எல்லா ஊடகங்களிலும் அறிக்கை விட்டேனா? ஜனாதிபதி 4000 மில்லியன் ஒதுக்கினார். நாங்கள் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப் போகிறோம்.
இங்கு வந்து சும்மா உட்காந்திருந்து, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது, எல்லாம் சரியாகி விடும் என்று அர்த்தம் இல்லை . அப்படிப் பார்த்தால் 1972 இலிருந்து இன்று வரைக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பந்தமாக 400 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டிருக்கிறார்கள். ஏதாவது ஒன்று நடந்திருக்கிறதா? இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது, நாங்கள் எங்களினுடைய கோரிக்கையை முன் வைத்தோம், அவர் எங்களை ஏற்றுவிட்டார். இவையெல்லாம் நடக்கின்ற காரியம் இல்லை. எங்களை பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி என்பவர் இலங்கை தொழிலாளர் கங்கிரஸுடன் சேர்ந்து வேலை செய்யக்கூடிய ஒரு தலைவனாக இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்
வீட்டுத்திட்டம் தொடர்பில் தாரை தப்பட்டை அடிக்கவுமில்லை, தனியுரிமை தொடர்பில் அறிக்கை விடவுமில்லை - ஜானாதிபதியே அதற்கான சூழலை உருவாக்கினார் - ஜீவன் தொண்டமான்.samugammedia வரப்போகும் தேர்தலில் ஜனாதிபதி யாராக இருந்தாலும், வேலை செய்யப்போகின்ற திறமை இருந்தாக வேண்டும். அப்படி உள்ளவர்களுக்கே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை வலுவூட்டலின் ஊடாக பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் திருகோணமலையில் இன்று (10) இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தொழிலாளரின் ஆதரவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாட்டை அதன் உயர்மட்டம் தான் சேர்ந்து முடிவு பண்ண வேண்டும். எமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை ஏற்கனவே கட்சி உயர் பீடத்துக்கு அறிவித்து விட்டேன். அது பற்றி நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். ஆனால் என்னை பொறுத்தவரையில் ஒரு பொதுச் செயலாளரோ சரி, அமைச்சரவையில் உள்ள அமைச்சரோ சரி, ரணில் விக்கிரமசிங்கவிடம் மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதில் முதலாவது விடயம், வீட்டு திட்டத்தை அமுல்படுத்தியாக வேண்டும். இன்று 10000 வீட்டுத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சூழலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியிருக்கிறார். அடுத்தது, இந்த சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று வேண்டும். இப்போது தொழிலமைச்சர் சம்பள நிர்ணய சபை ஊடாக 1200 சம்பளம் வழங்குவதாக தீர்மானித்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு தான். நிரந்தர தீர்வு என்ன என்பதை ஜனாதிபதி கட்டாயம் நிரூபித்தாக வேண்டும். கட்டாயம் செயல் முறைக்கும் கொண்டு வந்தாக வேண்டும். இறுதியாக மிக முக்கியமான விடயம் காணியுரிமை, ஜனாதிபதி இது சம்பந்தமாக 4200 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். நாளைய தினம் உறுதிப் பத்திரம் வழங்குகின்ற சூழலை உருவாக்கினால், அதனுடன் சேர்த்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் கேட்டால் எங்கள் ஆதரவு அவருக்கு இருக்கும்.அத்துடன் வரப்போகும் தேர்தலில் ஜனாதிபதி யாராக இருந்தாலும், வேலை செய்யப்போகின்ற திறமை இருந்தாக வேண்டும். ஒரு வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதாக நான் தாரை தப்பட்டை அடித்து சுற்றியிருந்தேனா அப்படி இல்லை. ஜனாதிபதி சூழலை உருவாக்கினார். நாங்கள் அதனை அமுல்படுத்தினோம். அதே போல காணி உரிமை சம்பந்தமாக எல்லா ஊடகங்களிலும் அறிக்கை விட்டேனா ஜனாதிபதி 4000 மில்லியன் ஒதுக்கினார். நாங்கள் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப் போகிறோம். இங்கு வந்து சும்மா உட்காந்திருந்து, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது, எல்லாம் சரியாகி விடும் என்று அர்த்தம் இல்லை . அப்படிப் பார்த்தால் 1972 இலிருந்து இன்று வரைக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பந்தமாக 400 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டிருக்கிறார்கள். ஏதாவது ஒன்று நடந்திருக்கிறதா இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது, நாங்கள் எங்களினுடைய கோரிக்கையை முன் வைத்தோம், அவர் எங்களை ஏற்றுவிட்டார். இவையெல்லாம் நடக்கின்ற காரியம் இல்லை. எங்களை பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி என்பவர் இலங்கை தொழிலாளர் கங்கிரஸுடன் சேர்ந்து வேலை செய்யக்கூடிய ஒரு தலைவனாக இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்