• Sep 29 2024

கோவில் உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய திருடர்கள் - சுவாமி சிலையில் இருந்த தங்க ஆபரணங்களும் அபேஸ் samugammedia

Chithra / Jul 9th 2023, 1:52 pm
image

Advertisement

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (08) சனிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆலயத்தின் பிரதான நுழைவாயிலின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.

திருடப்பட்ட உண்டியலை ஆலயமுற்றத்தில் உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். 

இது குறித்து நுவரெலியா பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற நுவரெலியா பொலிஸார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விரல் அடையாளயங்களையும் எடுத்து கொண்டார்கள்.

இதேவேளை இதற்கு முன்னரும் இவ் ஆலயத்தில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாழிமணி தங்க ஆபரணங்களையும் ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய காணிக்கை பணம் என்பன திருட்டு போயிருந்தமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இருப்பினும் அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


கோவில் உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய திருடர்கள் - சுவாமி சிலையில் இருந்த தங்க ஆபரணங்களும் அபேஸ் samugammedia நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (08) சனிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த ஆலயத்தின் பிரதான நுழைவாயிலின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தின் வெளிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.திருடப்பட்ட உண்டியலை ஆலயமுற்றத்தில் உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இது குறித்து நுவரெலியா பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற நுவரெலியா பொலிஸார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விரல் அடையாளயங்களையும் எடுத்து கொண்டார்கள்.இதேவேளை இதற்கு முன்னரும் இவ் ஆலயத்தில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாழிமணி தங்க ஆபரணங்களையும் ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய காணிக்கை பணம் என்பன திருட்டு போயிருந்தமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இருப்பினும் அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement