• Oct 05 2024

உயர்தர மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு..! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை samugammedia

Chithra / Sep 1st 2023, 7:15 am
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, நவீன தொழிற் சந்தையை நோக்கும் போது, கலைப் பாடங்களுக்குப் பதிலாக விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைக்கு அதிக வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

மாணவர்களுக்கு உயர்தரத்தில் விஞ்ஞானத் துறை பாடங்களைத் தொடர்வதற்குத் தேவை இருந்தாலும் பாடசாலை மட்டத்தில் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை பெரும் சிக்கலுக்குரியது என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தகவல்கள் பற்றிய சரியான தரவுகள் இல்லாமை சிக்கலானது எனவும், சரியான தரவு முறைமை ஒன்றை தயாரிக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களைத் தொடர்வதற்கு மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.


உயர்தர மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு. எடுக்கப்படவுள்ள நடவடிக்கை samugammedia பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தது.இதன்போது, நவீன தொழிற் சந்தையை நோக்கும் போது, கலைப் பாடங்களுக்குப் பதிலாக விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைக்கு அதிக வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.மாணவர்களுக்கு உயர்தரத்தில் விஞ்ஞானத் துறை பாடங்களைத் தொடர்வதற்குத் தேவை இருந்தாலும் பாடசாலை மட்டத்தில் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை பெரும் சிக்கலுக்குரியது என இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தகவல்கள் பற்றிய சரியான தரவுகள் இல்லாமை சிக்கலானது எனவும், சரியான தரவு முறைமை ஒன்றை தயாரிக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களைத் தொடர்வதற்கு மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

Advertisement

Advertisement

Advertisement