• Nov 16 2024

இந்த வெற்றி என் மனைவிக்கு சமர்ப்பணம் - சர்வதேச மேடையில் நெகிழ வைத்த இலங்கை வீரர்

Chithra / Jun 10th 2024, 7:49 am
image

 

தெற்காசிய உடற்கட்டமைப்பு செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இளைஞனின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

விஷ்வ தருக என்ற இளைஞன் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் தனது வெற்றிக்கு காரணமாக இருந்த மறைந்த மனைவி தொடர்பில் பேசிய காணொளியே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவர் வெற்றிப் பதக்கத்தைப் பெறுவதற்காக இறந்த மனைவியின் புகைப்படத்துடன் மேடை ஏறியுள்ளார்.

அவரது மனைவி கார் விபத்தில் இறந்து விட்டார் எனவும் தான் பதக்கம் பெறுவதே மனைவியின் கனவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்து போன தனது மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

இது குறித்து விஷ்வ தாருக கூறியதாவது,


“என் மனைவியே என்னை இந்த போட்டியில் ஈடுபடுத்தினார். அவர் எனக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரித்து உடலை கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்தார். அவர் என்னை ஊக்கப்படுத்தினார். ​​​​

கடந்த செப்டம்பரில் ஒரு மழை நாளில், அவர் என்னுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது காரில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டுள்ளார்.

நான் வெற்றி பெறுவதற்காக என் மனைவி நீண்ட நாட்களாக காத்திருந்தார். நான் இந்த வெற்றியை மனைவிக்காக அர்ப்பணிக்கின்றேன்.

அவர் எப்போதும் என்னுடன் இருப்பேன் என கூறினார். அவர் உலகில் இல்லை என்றாலும் என்னுடன் இருப்பார்” என விஷ்வ தருக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி என் மனைவிக்கு சமர்ப்பணம் - சர்வதேச மேடையில் நெகிழ வைத்த இலங்கை வீரர்  தெற்காசிய உடற்கட்டமைப்பு செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இளைஞனின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.விஷ்வ தருக என்ற இளைஞன் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் தனது வெற்றிக்கு காரணமாக இருந்த மறைந்த மனைவி தொடர்பில் பேசிய காணொளியே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.அவர் வெற்றிப் பதக்கத்தைப் பெறுவதற்காக இறந்த மனைவியின் புகைப்படத்துடன் மேடை ஏறியுள்ளார்.அவரது மனைவி கார் விபத்தில் இறந்து விட்டார் எனவும் தான் பதக்கம் பெறுவதே மனைவியின் கனவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இறந்து போன தனது மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து விஷ்வ தாருக கூறியதாவது,“என் மனைவியே என்னை இந்த போட்டியில் ஈடுபடுத்தினார். அவர் எனக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரித்து உடலை கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்தார். அவர் என்னை ஊக்கப்படுத்தினார். ​​​​கடந்த செப்டம்பரில் ஒரு மழை நாளில், அவர் என்னுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது காரில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டுள்ளார்.நான் வெற்றி பெறுவதற்காக என் மனைவி நீண்ட நாட்களாக காத்திருந்தார். நான் இந்த வெற்றியை மனைவிக்காக அர்ப்பணிக்கின்றேன்.அவர் எப்போதும் என்னுடன் இருப்பேன் என கூறினார். அவர் உலகில் இல்லை என்றாலும் என்னுடன் இருப்பார்” என விஷ்வ தருக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement