• May 07 2024

அரசின் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்: சபையில் காட்டமாக அறிவித்த பிரதமர்..!

Chithra / Nov 28th 2023, 3:51 pm
image

Advertisement

  

அரசாங்கத்தின் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இல்லையெனில் அவர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அமைச்சரவையானது ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும். அந்த ஒழுக்கத்தை பின்பற்றுவது அமைச்சரவை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினரின் பொறுப்பு.

அரசாங்கத்தின் கொள்கையை கடைபிடிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம், இல்லையெனில் அவர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​ஒரு சட்டமூலத்தை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினர் இறுதியில் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.

இது கடந்த காலத்தில் நடந்ததால், அதையே செய்யலாம் என்று நினைக்கும் சிலர் இங்கு உள்ளனர். அத்தகைய நடவடிக்கைகள் இப்போது நடைபெறாது என குறிப்பிட்டுள்ளார்.

அரசின் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்: சபையில் காட்டமாக அறிவித்த பிரதமர்.   அரசாங்கத்தின் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.இல்லையெனில் அவர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அமைச்சரவையானது ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும். அந்த ஒழுக்கத்தை பின்பற்றுவது அமைச்சரவை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினரின் பொறுப்பு.அரசாங்கத்தின் கொள்கையை கடைபிடிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம், இல்லையெனில் அவர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​ஒரு சட்டமூலத்தை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினர் இறுதியில் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார்.இது கடந்த காலத்தில் நடந்ததால், அதையே செய்யலாம் என்று நினைக்கும் சிலர் இங்கு உள்ளனர். அத்தகைய நடவடிக்கைகள் இப்போது நடைபெறாது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement