• Mar 29 2024

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த படகு உரிமையாளர்கள்: இந்திய மீனவர்களது 3படகுகள் அரசுடைமையாக்கப்பட்டது!

Sharmi / Jan 27th 2023, 5:34 pm
image

Advertisement

இந்திய மீனவர்களது மூன்று படகுகள் அரசுடமையாக்கப்பட்டவதாக நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நான்கு படகுகளுக்கான கட்டளை மார்ச் மாதம் 1ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊற்காவற்றுறை நீதிமன்றில் இன்று (27) எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏழு படகுகளுக்கான வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல தடவைகள் உரிமை கோரும் வழக்கில் உரிமையாளர் முன்னிலையாகாத மூன்று படகுகள் அரசுடமையாக்கப்பட்டவதாக நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

இன்று ஊற்காவற்றுறை நீதமன்றில் படகுரிமை வழக்கிற்காக இந்தியா, தமிழகம், இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கொண்ட  குழு முன்னிலையாகியிருந்தனர்.

இதன் போது இன்று ஏழு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. மூன்று வழக்குகள் அழைக்கப்பட்ட போது படகின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகவில்லை. பல தடவைகள் மன்றில் வழக்கு அழைக்கப்பட்ட போதும் உரிமையாளர் முன்னிலையாகியருக்கவில்லை. இதனால் குறித்த மூன்று படகுகளும் அரசுடமையாக்கி கட்டளையை பிறப்பித்தார் நீதவான் ஜே.கஜநிதிபாலன்.

மேலும் நான்கு படகுகளுக்கான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கின் சாட்சியாளர்களிடம் இன்று மன்றில் சாட்சியம் பெறப்பட்டது. சாட்சியினை சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோசன் மன்றில் நெறிப்படுத்தினார்.

வழக்குத் தொடுனர் சார்பில் நீரியள்வளத்துறை திணைக்கள அதிகாரி ம.இராஜேந்திரன் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.

சாட்சியங்களை அவதானித்த நீதவான் குறித்த வழக்கின் கட்டைக்காக எதிர்வரும் மார்ச் 1ம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

மேலும் இன்று மன்றில் முன்னிலையாகியிருந்த நான்கு படகுகளின் உரிமையாளர்களின் வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை  தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க ராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா கருத்து தெரிவிக்கையில்,

இப் படகுகளை நம்பி 25 க்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமானது தங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராவதற்குக் கூட கடன்பட்டு 2  இலட்சத்திற்கு மேற்பட்ட பணத்தொகையை செலவிட்டே விசாரணைகளுக்காக இங்கு வந்துள்ளோம்.  அந்த வகையில் இலங்கை மற்றும் இந்தியா அரசுகள் மீனவர்களின் வாழ்வாதார சூழ்நிலைகளை கருத்திலெடுத்து இப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசும் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்து இப் படகுகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும். .இவற்றுடன் தமிழகத்திலுள்ள இலங்கை மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக அமைகின்றது என்றார்.



இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த படகு உரிமையாளர்கள்: இந்திய மீனவர்களது 3படகுகள் அரசுடைமையாக்கப்பட்டது இந்திய மீனவர்களது மூன்று படகுகள் அரசுடமையாக்கப்பட்டவதாக நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நான்கு படகுகளுக்கான கட்டளை மார்ச் மாதம் 1ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.இந்திய மீனவர்களின் 17 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு ஊற்காவற்றுறை நீதிமன்றில் இன்று (27) எடுத்துக்கொள்ளப்பட்டது.ஏழு படகுகளுக்கான வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல தடவைகள் உரிமை கோரும் வழக்கில் உரிமையாளர் முன்னிலையாகாத மூன்று படகுகள் அரசுடமையாக்கப்பட்டவதாக நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.இன்று ஊற்காவற்றுறை நீதமன்றில் படகுரிமை வழக்கிற்காக இந்தியா, தமிழகம், இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கொண்ட  குழு முன்னிலையாகியிருந்தனர்.இதன் போது இன்று ஏழு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. மூன்று வழக்குகள் அழைக்கப்பட்ட போது படகின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகவில்லை. பல தடவைகள் மன்றில் வழக்கு அழைக்கப்பட்ட போதும் உரிமையாளர் முன்னிலையாகியருக்கவில்லை. இதனால் குறித்த மூன்று படகுகளும் அரசுடமையாக்கி கட்டளையை பிறப்பித்தார் நீதவான் ஜே.கஜநிதிபாலன்.மேலும் நான்கு படகுகளுக்கான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.வழக்கின் சாட்சியாளர்களிடம் இன்று மன்றில் சாட்சியம் பெறப்பட்டது. சாட்சியினை சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோசன் மன்றில் நெறிப்படுத்தினார்.வழக்குத் தொடுனர் சார்பில் நீரியள்வளத்துறை திணைக்கள அதிகாரி ம.இராஜேந்திரன் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.சாட்சியங்களை அவதானித்த நீதவான் குறித்த வழக்கின் கட்டைக்காக எதிர்வரும் மார்ச் 1ம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.மேலும் இன்று மன்றில் முன்னிலையாகியிருந்த நான்கு படகுகளின் உரிமையாளர்களின் வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் படகின் உரிமையாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.அதேவேளை  தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க ராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா கருத்து தெரிவிக்கையில்,இப் படகுகளை நம்பி 25 க்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமானது தங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராவதற்குக் கூட கடன்பட்டு 2  இலட்சத்திற்கு மேற்பட்ட பணத்தொகையை செலவிட்டே விசாரணைகளுக்காக இங்கு வந்துள்ளோம்.  அந்த வகையில் இலங்கை மற்றும் இந்தியா அரசுகள் மீனவர்களின் வாழ்வாதார சூழ்நிலைகளை கருத்திலெடுத்து இப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசும் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்து இப் படகுகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும். .இவற்றுடன் தமிழகத்திலுள்ள இலங்கை மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக அமைகின்றது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement