• Jul 27 2024

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை! samugammedia

Tamil nila / Nov 3rd 2023, 8:20 pm
image

Advertisement

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஏனைய இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

இடியுடன் கூடிய மழைப் பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி, களு, கிங், நில்வளா ஆகிய கங்கைகள் மற்றும் மஹா ஓயா அத்தனுகளு ஓயா ஆகிய ஆறுகள் என்பவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை samugammedia நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சபரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.ஏனைய இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.இடியுடன் கூடிய மழைப் பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.களனி, களு, கிங், நில்வளா ஆகிய கங்கைகள் மற்றும் மஹா ஓயா அத்தனுகளு ஓயா ஆகிய ஆறுகள் என்பவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement