டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள நான்கு மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீவிபத்தால் பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில் மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார்.