• May 08 2024

கட்டாரில் துயர சம்பவம் - இலங்கையர் பரிதாபமாக உயிரிழப்பு! - ஒருவர் மாயம் SamugamMedia

Chithra / Mar 25th 2023, 7:22 am
image

Advertisement

மத்திய கிழக்கு நாடான கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியிலுள்ள தொடர்மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

56 வயதான நிஷங்க சில்வா என்பவ​ரே உயிரிழந்துள்ளதுடன், 60 வயதான அப்துல் ரசாக் ஜமீல் என்பவர் காணாமல் போயுள்ளார்.


குறித்த கட்டடத்தொகுதியில் பணியாற்றிய வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து ஆய்வுகளை கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் துயர சம்பவம் - இலங்கையர் பரிதாபமாக உயிரிழப்பு - ஒருவர் மாயம் SamugamMedia மத்திய கிழக்கு நாடான கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.கடந்த புதன்கிழமை பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியிலுள்ள தொடர்மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.56 வயதான நிஷங்க சில்வா என்பவ​ரே உயிரிழந்துள்ளதுடன், 60 வயதான அப்துல் ரசாக் ஜமீல் என்பவர் காணாமல் போயுள்ளார்.குறித்த கட்டடத்தொகுதியில் பணியாற்றிய வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.இது குறித்து ஆய்வுகளை கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement