• Sep 22 2024

குமுதினி படகு சேவையை ஆரம்பிப்பதில் மீண்டும் சிக்கல்! samugammedia

Chithra / Jul 30th 2023, 2:54 pm
image

Advertisement

திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காக மீண்டும் இன்றையதினம் சேவையில் ஈடுபட தயாராக இருந்த குமுதினி படகு இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளது.

திருத்த வேலைகளின் பின்னர் படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இன்று(29) காலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நிலையில் படகில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படகை கடலுக்குள் இறக்குவதற்காக நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டு படகிற்கான பரிசோதனை செய்து ஐந்து தடவை பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் நிகழ்வு ஆரம்பாக சிலமணி நேரம் முன்பாக குறித்த படகு இயக்கப்பட்டு குறிக்கட்டுவான் இறங்குதுறை கொண்டுவரும் போது இயந்திர கோளாறால் செயலிழந்தது.

எனினும் அதனை இயக்குவதற்கான பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டபோதும் அம்முயற்சிகள் கைகூடவில்லை.

இதேவேளை படகின் செயலிழந்த இயந்திர பகுதி திருத்தபணிக்காக நீர்கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ் தெரிவித்ததுடன் எமது திணைக்கள நிபுணத்துவ குழுவின் பரிசோதனைக்கு பின்னரே மீண்டும் படகு சேவையை ஆரம்பிக்கும் என்றார்.

குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குமுதினி படகு சேவையை ஆரம்பிப்பதில் மீண்டும் சிக்கல் samugammedia திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காக மீண்டும் இன்றையதினம் சேவையில் ஈடுபட தயாராக இருந்த குமுதினி படகு இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளது.திருத்த வேலைகளின் பின்னர் படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இன்று(29) காலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நிலையில் படகில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படகை கடலுக்குள் இறக்குவதற்காக நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டு படகிற்கான பரிசோதனை செய்து ஐந்து தடவை பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது.இந்நிலையில் இன்றைய தினம் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் நிகழ்வு ஆரம்பாக சிலமணி நேரம் முன்பாக குறித்த படகு இயக்கப்பட்டு குறிக்கட்டுவான் இறங்குதுறை கொண்டுவரும் போது இயந்திர கோளாறால் செயலிழந்தது.எனினும் அதனை இயக்குவதற்கான பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டபோதும் அம்முயற்சிகள் கைகூடவில்லை.இதேவேளை படகின் செயலிழந்த இயந்திர பகுதி திருத்தபணிக்காக நீர்கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ் தெரிவித்ததுடன் எமது திணைக்கள நிபுணத்துவ குழுவின் பரிசோதனைக்கு பின்னரே மீண்டும் படகு சேவையை ஆரம்பிக்கும் என்றார்.குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement