• May 12 2024

நாடு திரும்பும் ரணிலுக்கு சிக்கல்..! - தீவிர பாதுகாப்பில் விமான நிலையம்! விடுக்கப்பட்ட உத்தரவு samugammedia

Chithra / Jun 25th 2023, 7:40 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்காவிலிருந்து நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமுல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டிற்கு விஜயம் செய்யும் உயரடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாசவேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம், ஸ்னைப்பர் தாக்குதல் அபாயம், பொது மக்களால் குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் உள்ளிட்ட ஆறு விடயங்கள் தொடர்பான அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது என்பது தொடர்பில் 08 அம்சங்களின் கீழ் நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இதுபோன்ற தொடர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது என்று பொலிஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நாடு திரும்பும் ரணிலுக்கு சிக்கல். - தீவிர பாதுகாப்பில் விமான நிலையம் விடுக்கப்பட்ட உத்தரவு samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்காவிலிருந்து நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமுல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி நாட்டிற்கு விஜயம் செய்யும் உயரடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாசவேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம், ஸ்னைப்பர் தாக்குதல் அபாயம், பொது மக்களால் குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் உள்ளிட்ட ஆறு விடயங்கள் தொடர்பான அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.அதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது என்பது தொடர்பில் 08 அம்சங்களின் கீழ் நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களை அவர் வெளியிட்டுள்ளார்.எப்படியிருப்பினும் இதுபோன்ற தொடர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது என்று பொலிஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement