• May 08 2024

முக்கிய வசதியை நீக்கும் டுவிட்டர் X நிறுவனம்: பயனாளர்கள் அதிர்ச்சி! samugammedia

Tamil nila / Aug 22nd 2023, 9:34 am
image

Advertisement

டுவிட்டர் எக்ஸ் செயலியில் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதலை தடுக்க ப்ளாக் வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ப்ளாக் வசதியை நீக்கம் செய்ய இருப்பதாக எலான் மாஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தை வேண்டா வெறுப்பாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தினார்.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது ப்ளாக் செய்யும் வசதியை டுவிட்டர் எக்ஸ் தளத்திலிருந்து இருந்து நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண நிர்ணயித்தது, டுவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றியது, கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு விளம்பர வருமானமாக ஒரு சதவீதம் தருவது என்று பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பிளாக் செய்யும் வசதியை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் குறுஞ்செய்தியை மீயூட் செய்யும் வசதி மட்டும் தொடர்ந்து இயங்கும், மேலும் டைம் லைனில் நோட்டிபிகேஷன் காட்டுவதை தடுக்க முடியாது. இந்த புதிய மாற்றம் பயனாளர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் பெண் பயனாளர்கள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆபாச தாக்குதல் மற்றும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ப்ளாக் வசதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் விதிமுறைகளின் படி பயனாளர்களின் மீதான தாக்குதலை தடுக்க ப்ளாக் வசதி இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதை ட்விட்டர் எக்ஸ் நிறுவனம் நீக்கி இருப்பதால் இந்த இரண்டு தளங்கள் மூலமாக இனி ட்விட்டர் எக்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

முக்கிய வசதியை நீக்கும் டுவிட்டர் X நிறுவனம்: பயனாளர்கள் அதிர்ச்சி samugammedia டுவிட்டர் எக்ஸ் செயலியில் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதலை தடுக்க ப்ளாக் வசதி பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ப்ளாக் வசதியை நீக்கம் செய்ய இருப்பதாக எலான் மாஸ் தெரிவித்துள்ளார்.உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தை வேண்டா வெறுப்பாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தினார்.எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது ப்ளாக் செய்யும் வசதியை டுவிட்டர் எக்ஸ் தளத்திலிருந்து இருந்து நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கு முன்பு ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டண நிர்ணயித்தது, டுவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றியது, கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு விளம்பர வருமானமாக ஒரு சதவீதம் தருவது என்று பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்பொழுது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பிளாக் செய்யும் வசதியை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் குறுஞ்செய்தியை மீயூட் செய்யும் வசதி மட்டும் தொடர்ந்து இயங்கும், மேலும் டைம் லைனில் நோட்டிபிகேஷன் காட்டுவதை தடுக்க முடியாது. இந்த புதிய மாற்றம் பயனாளர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் பெண் பயனாளர்கள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.ஆபாச தாக்குதல் மற்றும் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ப்ளாக் வசதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது திரும்ப பெறப்பட்டுள்ளது.மேலும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் விதிமுறைகளின் படி பயனாளர்களின் மீதான தாக்குதலை தடுக்க ப்ளாக் வசதி இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதை ட்விட்டர் எக்ஸ் நிறுவனம் நீக்கி இருப்பதால் இந்த இரண்டு தளங்கள் மூலமாக இனி ட்விட்டர் எக்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement