• Jan 19 2025

கேரளா கஞ்சாவுடன் கல்முனையில் இருவர் கைது..!

Sharmi / Dec 11th 2024, 4:03 pm
image

கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து இரு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஒரு தொகை கேரளா கஞ்சா கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

43 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களும் மத்தியமுகாம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்களாவர்.

குறித்த கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியில் இருந்து பேருந்து ஊடாக  கடத்தப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கேரளா கஞ்சாவுடன் கல்முனையில் இருவர் கைது. கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து இரு சந்தேக நபர்களை கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஒரு தொகை கேரளா கஞ்சா கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.43 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களும் மத்தியமுகாம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்களாவர்.குறித்த கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியில் இருந்து பேருந்து ஊடாக  கடத்தப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement