மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாப சாவு

327

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் 31 வயதுடைய பரமேஸ்வரன் தனுஜன், 31 வயதுடைய டினேகா என்பவர்களே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலும் அறியவருவது,

குறித்த நபர் கொழும்பில் இருந்து நேற்று இரவு அவரது உறவினரான பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி காரில் பிரயாணித்துள்ளனர்.

இந்த நிலையில், வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பட்டை மீறி கார் வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அந்த பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கு சென்று உயிரிழந்த நிலையில் இருவரையும் காரில் இருந்து மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: