• Sep 08 2024

காதல் விவகாரத்தால் பறிபோன இரு உயிர்கள் : போலீசார் தீவிர விசாரணை! samugammedia

Tamil nila / Oct 21st 2023, 9:23 pm
image

Advertisement

கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் வங்கி ஊழியர்கள் இருவர் காதல் விவகாரத்தால் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காதலி காருக்குள் கழுத்தில் குத்துப்பட்டு உயிரிழந்தும், காதலன் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இருவரின் உடல்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

”விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் ஆண் சடலம் ஒன்று சாலையில் தலை நசுங்கி கிடப்பதாக கிளியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த உடலின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்றை திறந்து பார்த்த போது பெண் ஒருவர் காரின் உள்ளே கழுத்தில் குத்துப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருப்பதை போலீசார் கண்டுள்ளனர்.

இருவரது  உடலையும் மீட்டு புதுச்சேரி கணக செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிம்ஸ் தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர். முன்னதாக இருவரும் வைத்திருந்த வாகன ஒட்டுனர் உரிமம் மற்றும் அவர்கள் பணி புரிந்து வந்த தனியார் வங்கியின் (karur vysya bank) அடையாள அட்டைகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்,

இதில் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37), இவருக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் என புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர் கரூர் வைசியா வங்கியின் மரக்காணம் கிளை மேலாளராக பணி புரிந்து வருவதும், இறந்த பெண் மதுரா பாஃண்டிஸ் (34), அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கரூர் வைசியா வங்கி கிளையின் மேலாளராக பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கியில் ஒன்றாக பணி புரிந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ள காதலாக மாறி உள்ளதாகவும், இந்த விவகாரம் கோபிநாதின் மனைவிக்கு தெரியவர அவர் கோபியை கண்டித்துள்ளார்,

மேலும் மதுராவை கோபி திருப்புலியால் குத்தி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடைபெற்றதில் மதுரா தன்னை தானே திருப்புலியால் குத்தி கொண்டதை கண்டு அச்சம் அடைந்த கோபி சாலையில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்,

குறிப்பாக கள்ள காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


காதல் விவகாரத்தால் பறிபோன இரு உயிர்கள் : போலீசார் தீவிர விசாரணை samugammedia கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் வங்கி ஊழியர்கள் இருவர் காதல் விவகாரத்தால் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் காதலி காருக்குள் கழுத்தில் குத்துப்பட்டு உயிரிழந்தும், காதலன் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.உயிரிழந்த இருவரின் உடல்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,”விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் ஆண் சடலம் ஒன்று சாலையில் தலை நசுங்கி கிடப்பதாக கிளியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த உடலின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்றை திறந்து பார்த்த போது பெண் ஒருவர் காரின் உள்ளே கழுத்தில் குத்துப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருப்பதை போலீசார் கண்டுள்ளனர்.இருவரது  உடலையும் மீட்டு புதுச்சேரி கணக செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிம்ஸ் தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர். முன்னதாக இருவரும் வைத்திருந்த வாகன ஒட்டுனர் உரிமம் மற்றும் அவர்கள் பணி புரிந்து வந்த தனியார் வங்கியின் (karur vysya bank) அடையாள அட்டைகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்,இதில் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37), இவருக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் என புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர் கரூர் வைசியா வங்கியின் மரக்காணம் கிளை மேலாளராக பணி புரிந்து வருவதும், இறந்த பெண் மதுரா பாஃண்டிஸ் (34), அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கரூர் வைசியா வங்கி கிளையின் மேலாளராக பணியாற்றி வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கியில் ஒன்றாக பணி புரிந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ள காதலாக மாறி உள்ளதாகவும், இந்த விவகாரம் கோபிநாதின் மனைவிக்கு தெரியவர அவர் கோபியை கண்டித்துள்ளார்,மேலும் மதுராவை கோபி திருப்புலியால் குத்தி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடைபெற்றதில் மதுரா தன்னை தானே திருப்புலியால் குத்தி கொண்டதை கண்டு அச்சம் அடைந்த கோபி சாலையில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்,குறிப்பாக கள்ள காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement