• Jan 15 2025

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Chithra / Jan 14th 2025, 10:10 am
image

 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்காமடி வீதியைச் சேர்ந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் உள்ள கிணற்றுக்கு அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில்,  குறித்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பார்த்த நிலையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில், கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தை மட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிரேத பரிசோதைனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தோடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு  மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மக்காமடி வீதியைச் சேர்ந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் உள்ள கிணற்றுக்கு அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில்,  குறித்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பார்த்த நிலையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில், கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தை மட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தை பிரேத பரிசோதைனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தோடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement