உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ள அதிக காலம் தேவைப்படும் என ஐரோப்பாவிற்கான பிரான்சின் செயலாளர் கிளமென்ட் பியுனெ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கும் போது, “உக்ரைன் இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விடும் என நீங்கள் கூறினால் அது முற்றிலும் பொய்யான ஒரு தகவல் ஆகும். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ள இன்னும் 15 இருந்து 20 ஆண்டுகள் எடுக்கும்.
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய தகுதி பெறவேண்டும். அதற்கான காலமே இதுவாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் “ஐரோப்பிய அரசியல் சமூகத்துடன்” இணைந்து உக்ரைனை விரைவாக அபிவிருத்தி செய்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கு முயற்சிகள் செய்த போதிலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதனை மறுத்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டத்தில் உக்ரைனும் ஒன்றிய குடும்ப அங்கத்தவர் என்று முன்மொழியப்பட்டாலும் விரைவாக இணைந்து கொள்ளும் திட்டம் நிராகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிற செய்திகள்
- இனப்பிரச்சினையைத் தீர்த்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது! – சந்திரிக்காவின் சுடலை ஞானம்
- உலக செஸ் சம்பியனை உளவாளி ஆக்கிய ரஷ்யா!
- மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு!
- மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்! – எரிசக்தி அமைச்சர் கோரிக்கை
- யாழிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை முன்னெடுப்பு!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்