• May 01 2024

ஐ.நா. தலைமையகத்தில் இடம்பிடித்த மகாத்மா காந்தி!

Sharmi / Dec 16th 2022, 1:06 pm
image

Advertisement

ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பைஇ அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து  ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை நேற்றையதினம்(15) திறக்கப்பட்டது.

இருநாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அன்டோனியோ குட்டரெஸும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.

இந்திய அரசு பரிசாக வழங்கிய இந்த சிலையை புகழ்பெற்ற இந்திய சிற்பியும் 'பத்மஸ்ரீ' விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்ததாகும்.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஐ.நா. தலைமையகத்தில் இடம்பிடித்த மகாத்மா காந்தி ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பைஇ அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து  ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை நேற்றையதினம்(15) திறக்கப்பட்டது.இருநாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அன்டோனியோ குட்டரெஸும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.இந்திய அரசு பரிசாக வழங்கிய இந்த சிலையை புகழ்பெற்ற இந்திய சிற்பியும் 'பத்மஸ்ரீ' விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்ததாகும்.இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement